STORYMIRROR

Chidambranathan N

Children Stories

3  

Chidambranathan N

Children Stories

தாலாட்டு

தாலாட்டு

1 min
257

ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!


ஆட்டிக் கொண்டே நான் பாட!
ஆசையான என் செல்லமே!
ஆடிக் கொண்டே நீ கண்ணுறங்கு!


ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!


மருத நில மாணிக்கமே!
மயில் போன்ற அழகே!
மழலையே உன்னைப் போல யார் அழகு?
மகிழ்ச்சியாய் நீ கண்ணுறங்கு!


ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!


தேனும் தினை மாவும்!
தேரில் சென்று நான் வாங்கித் தருகிறேன் என் செல்லமே! 
தென்றலே நீ கண்ணுறங்கு!


ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!

ஆலமரத்தடியில்!
ஆசையாய் நீ கண்ணுறங்க!
ஆனந்தமாய் நான் பாட!
அமைதியாக நீ கண்ணுறங்கு !


ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!

வெறும் தரையில் நீ பவனி வர
வெட்கம் நிறைந்த உன் பார்வையிலே - என் கண்ணே!
வெண்பூசணியில் சுற்றிப் போட்டியிடுவேன் உனக்கு!
வெறுமை உன்னைச் சேராது!


ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!

அமைதியாக நீ தவழ
அச்சம் கொள்ளவைத்து யாரோ?
அழ வைத்தது யார் என்று கூறு?
அடித்துவிடலாம் அவர்களை!


ஆராரோ ஆராரோ என் செல்லமே
ஆராரோ ஆராரோ!


உன்னை யார் அடித்தார்கள்?
உன்னை யார் என்ன சொன்னார்கள்?
உனக்கேன் இந்தக் கண்ணீர்?
உன்னை நல்ல பிள்ளை என்று தெரியுமே என் தங்கமே!


ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!

பட்டு வண்ண ரோச நீ!
பலாப்பழச் சுளை நீ!
பாடுபட்டு உன்னைக் காப்பென!
பாலாய்ப் போன இந்த உலகிலே!


ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!

கண்ணே கண்ணுறங்கு  - என்
கண்மணியே நீ உறங்கு!
கட்டித்தங்கமே நீ உறங்க - என் 
கண்மணியே நான் உறங்க!


ஆராரோ ஆராரோ என் செல்லமே!
ஆராரோ ஆராரோ!


Rate this content
Log in