பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்
பொருளாதார தாக்கத்தின்
முளைத்த காளான் மண்ணில்
ஒரு ஜான் வயிற்றுக்காக
ஏங்கும் ஓர் மனித இனம் ......!!!
வீடு வாசல் தேடி அலையும்
பசி தீர ஒரு கிண்ணம் ஏந்தி
ஒதுங்க ஒரு இடம் இல்லா
தவிக்கும் ஓர் மனித இனம் .......!!!
பிஞ்சு கைகளும்
முதிய கால்களும்
முடியாத பெண்களும்
ஊனமுற்ற மனித இனமும் ......!!!
இவர்கள்........
காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
கட்சிகள் மாறினாலும்
பிச்சைகள் மாறாது ..............!!!