STORYMIRROR

Se Bharath Raj

Others

4  

Se Bharath Raj

Others

ஹோலி நாளில்

ஹோலி நாளில்

1 min
279

உடலை நடுக்கிய குளிர் ஓடி

வசந்தம் பிறந்தது

பட்டை தீட்டிய அருவாள் எங்கோ இருக்க,


காற்றிற்கு வண்ணம் தீட்டி

பகைவரிடம் நட்பு பேசி

தெரிந்தவர்களிடம் காதல் கொட்டி

அறுவடை தினம்

நண்பர்கள் தினமாக

காதலர்கள் தினமாக மாற்றியது.


மனைவிக்கு மஞ்சள் குங்குமம் இட்ட

கணவன் ஒரு புறம் இருந்தால்

காதலனுக்கு மஞ்சள் குங்குமம் இட்ட

காதலி ஒரு புறம் இருக்கிறாள்.


நேற்று,

கருப்பு யார்?

வெள்ளை யார்?

என்று விவாதம் செய்த சாம்பல் நிற கோஷ்டிகள் இரண்டு

இன்று,

மஞ்சள் ஒன்றாக

சிவப்பு ஒன்றாக

நீலம் ஒன்றாக

பச்சை ஒன்றாக

ஊதா ஒன்றாக இல்லாது

எல்லாம் கலந்து

நிற்கின்றன கலந்து.



Rate this content
Log in