சொல்லி வளர்ப்போம்!
சொல்லி வளர்ப்போம்!


தீயவற்றை பார்க்காதே!
தீயவற்றை கேட்காதே!
தீயவற்றை பேசாதே!
ஒருமையுள் ஆமை போல்"
எத்தகு உவமை ?
புலன்களை அடக்கி விட்டால்....
புவியில் ஏது துன்பம்?
இதை தவறாய் புரிந்து கொண்டனரோ மக்கள் ?
கண்ணெதிரே பெண்களுக்கு
அரங்கேற்ற ப்படும் கொடுமை....
ஏழைகளுக்கு எதிராக
இழைக்கப்படும் அநீதி....
ஏழைகளுடைய கூக்குரல்.....
கொலை .....கொள்ளை....
கற்பழிப்பு.... உரிமை பறிப்பு...
p>
இதையெல்லாம் கண்டும் காணதவர்களாய்!
கேட்டும்..... கேளாதவர்களாய்!
பேசியும் .... பேசாத ஊமைகளாய்!
தட்டிக் கேட்க திராணியற்று....
குருடாய்.... செவிடாய்.... ஊமையாய்.....
சுயநலம் மிக்க சமுதாயம்....
மனம் கணக்கிறது!
எது தவறு? எது சரி?
பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்!
சொன்னபடி செய்தும் காட்டுவோம்!
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்!
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே!