KANNAN NATRAJAN

Children Stories


3  

KANNAN NATRAJAN

Children Stories


பூரி பாடம்

பூரி பாடம்

2 mins 111 2 mins 111

தாத்தா எனக்குப் பிடித்த திரைப்படம் குறித்து ஒரு பிராஜெக்ட்…..செய்து தருகிறீர்களா?

போடா! ஏதோ அப்பா,அம்மா இல்லாத குழந்தையாச்சேன்னு பார்த்தா உன் சித்தப்பா உன்னைப் பெரிய பள்ளியில் சேர்த்துட்டான். பள்ளிக்கூடத்துல செய்கிற வேலையைத்தான் புரிந்து வீட்டில் பிராஜெக்ட் செய்வாங்க..

பள்ளியில் சென்ற ஆண்டு என்ன படம் காட்டினார்கள்?

ஏதோ மிருகங்கள் காட்டில் வசிப்பது பற்றி…

அப்ப அதைப் பற்றி எழுது!…….

தாத்தா..நீங்க பேசுற தமிழ் புரியுது தாத்தா..புரியலைன்னா கேட்கிறேன்.

ஆனா எங்க பள்ளியில் தமிழ் தெரியலைன்னு கேட்டா மிஸ்சுக்கே புரியலைங்கறாங்க…..

எண்டா!

அந்த மிஸ் தெலுங்கு படிச்சுட்டு வந்தவங்களாம்…….

ஏண்டா தாய்மொழின்னா அதுல இருந்து படிச்சு வர்றவங்களைதானேடா வைக்கமுடியும்.?

எனக்கெப்படி தாத்தா தெரியும்?டீச்சருக்கே கிரியேட்டிவா எழுத சொல்லித்தராம நெட்டைப் பார்த்து இல்லைன்னா வீட்டில் இருக்கிறவங்களைக் கேட்டு எழுதுன்னா எப்படி தாத்தா? இல்லைன்னா கைடை விரிச்சு வச்சுக்கிறாங்க….

தமிழ்தானேடா! அதனால மரியாதை தர மாட்டாங்கடா….அதனால வர்ற டீச்சரை வச்சுதானேடா நடத்தமுடியும்…

தாத்தா நீங்க தமிழ் புலவர்தானே! நீங்க அப்படித்தான் பாடம் நடத்தினீங்களா?

தலைமுறை மாறுதுப்பா!

அப்ப பேசாம என்னை அரசு பள்ளிக்கே மாத்திடுங்க..ஏதாவது ஒரு மொழி தெரிஞ்சா தாய்மொழியில் படிச்சாலே போதும்...இன்னைக்கு படிச்சது நாளைக்கு நினைவுல நிக்கறதே பெரும்பாடு. இதுல போன வருஷம் படிச்ச இலக்கணத்தை ஏண்டா மறந்தேன்னு கேட்கிறாங்க….

இதுல நீங்க வேறஇந்தி படி..இங்கிலீஷ்படின்னு தொல்லை பண்றீங்க!..

தமிழ் படிச்சா வேலை எங்கேடா நல்லா கிடைக்கும்.கம்மி சம்பளம்தாண்டா..இலஞ்சம் கொடுத்தால்தாண்டா நல்ல வேலை.

ஏன் தாத்தா இங்கிலீஷ் பேசிக் தெரிஞ்சா போதாதா?

போதும். அப்ப நான் விவசாயம் பண்றேன். நாலு மாடு வாங்கி விற்றாலே போதும்.கெவின்கேர் மாதிரி…

உடலுக்கு நல்ல போஷாக்கு தரணும்,காய்,பழம் சாப்பிடணும். போக வர வண்டி வேணும். இருக்க ஒரு வீடு வேணும்.அவ்வளவுதானே தாத்தா எனக்கு தேவை.

ஆமாண்டா!

அதுக்கு எதுக்கு தாத்தா இவ்வளவு கஷ்டப்பட்டு பன்னிரண்டு வருடம் மனப்பாடம் பண்ணி படிக்கணும்.எல்லா அரசு பணி இலஞ்சம்தான்னு பேசிக்கிறாங்க.ஏதோ ஒண்ணு இரண்டு வேணும்னா விதி விலக்கு இருக்கலாம். உனக்கு வெளிநாடு போய் படிக்கணும்னு ஆசை இல்லையா? நம்ம சொந்தங்க எல்லாம் அப்படிச் சொன்னால்தானே பெருமையா நினைப்பாங்க..

வெளிநாடு போகலாம் தாத்தா! அங்க என்ன படிப்பு இருக்கோ அது இங்கேயே இருக்குன்னா நாம ஏன் அங்கே போகணும்?

ஊர்ப் பெருமைக்காக வாழ முடியாது. நெட்ல படிச்சேன் தாத்தா… அமெரிக்காவில் டாய்லட் தண்ணீர் எல்லாம் கீழ்வீட்டு சமையல் அறையில் நீர்கசிஞ்சு ஒழுகினது என்று……..

மலேசியாவில் கழிவுநீர் பிரச்னை இருக்கிறது…,மொபைல் டேஞ்சர்ஸ் பெண்களுக்கு நிறைய கெடுதல் தருதுன்னு சொல்றாங்க.இப்படி நாட்டுக்கு நாடு பிரச்னை இருக்கும்போது நம்மநாட்டை விட்டுட்டு போக முடியாது.

இவ்வளவு நல்லா பேசறியே! அப்படியே எழுதேன்!.

பேச்சுத் தமிழ் வேற..எழுதற தமிழ் வேற..அதுலதான் பிழை வருது….

உலகெங்கும் தமிழ் இருக்கு..சில மாறுபாடு இருக்கு..ஆனா அடிப்படை இலக்கணம் ஒண்ணுதானே! அதனால பேசும்போதே பிறமொழிச்சொல் கலக்காம பேசு..சரியா வரும்…இதெல்லாம் புத்தகத்திலே வராது.அடிப்படையாகப் பேசிப் பழகுறவிதத்துல இருக்கு…..

தாத்தா..ப்ளீஸ்..நீங்களே எழுதிக்கொடுங்களேன்..

நீ எழுது..நான் சரி செஞ்சு தருவேன்.எனக்கு வீர அபிமன்யு படம் பார்க்கணும்….வயசான காலத்துல நீ ரொம்ப தொல்லை பண்றடா……அப்படியே படம் பார்த்து இரண்டு பூரியும் உனக்கு போடுவேன்…

ஏன் தாத்தா..இந்த படத்தை எத்தனை தடவைதான் பார்ப்பீங்க..அவனும் விடாமல் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்று போடுவான்..‘ஆ”ன்னு வாயைப் பிளந்துட்டு பார்ப்பீங்க.. இரண்டு விளம்பரம் புஸ்னு பூரி உப்பி வர்றமாதிரி கெமிகல் கலந்து காட்டுவான். வீட்டிலேயே மாவு பிசைந்து ஊற வைத்து போட்டால் புஸ்னு வராதா!.இதெல்லாம் என் ஃப்ரெண்டு கோமு சொன்னா. உங்க பூரியைவிட அவ பூரி நல்லா இருக்கும்…...எனக்கு எழுதுனா என்னவாம்……..அவ வீட்டுலயும் அப்படித்தான் நடக்குதாம்….இல்லைன்னா ட்யூஷனுக்கு விரட்டி விட்டுடவேண்டியது. கேட்டால் இந்தகாலத்துபசங்களோட மாரடிக்க முடியலைன்னு அக்கம்பக்கத்து ஆளுங்களோடு கதை பேச வேண்டியது……. நாங்க இரண்டு பக்கமும் அல்லாடுறோம்….. தூக்கத்துலயாவது நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா எட்டு மணி பள்ளிக்கு ஏழரைக்கு எழுப்பறீங்க.பக்கத்துல இருக்கிற பள்ளிதானே.இன்னமும் கால்மணி நேரம் தூங்க விடுறது கிடையாது. என்றபடி சற்று தள்ளி தாத்தா பிடிக்கமுடியாதபடி ஓடினான்.Rate this content
Log in