Harini Ganga Ashok

Children Stories Inspirational Children

4  

Harini Ganga Ashok

Children Stories Inspirational Children

ஒற்றுமை

ஒற்றுமை

2 mins
265


பஞ்சதந்திர கதைகள் பிரத்யேகமாக குழந்தைகளுக்கானது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நீதி கருத்துகளையும் கொண்டிருக்கும். நவீன காலத்தில் பஞ்சதந்திர கதை எவ்வாறு இருக்கும்...


அது மிகவும் புகழ்பெற்ற தனியார் பள்ளி. பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உண்டு என்றால் அங்கே பரபரப்பிற்கு பஞ்சம் இராது. அன்று பள்ளிக்கு மாவட்ட கல்வி அதிகாரியிடம் இருந்து அஞ்சல் ஒன்று வந்தது. மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகளில் பங்குபெறுவதற்கான அழைப்பு. பள்ளியில் ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்று கொண்டார்கள். மாணவர்களும் தங்களின் ஆர்வத்தை காட்டினர். பள்ளி என்றாலே சீனியர் ஜூனியர் என்று மோதல் எல்லாம் இருக்கத்தானே செய்யும். இப்போதும் மோதி கொண்டனர்.


போட்டிகள் அம்மாவட்டத்தின் மைய விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. பல்வேறு தரப்பான போட்டிகள் நடந்துவந்தன. அனைத்து வகுப்பு மாணவர்களும் குழுவாக பிரிக்கப்பட்டனர். இதில் சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆசிரியரிடம் மறுத்தனர். ஆசிரியரோ தன் பேச்சை மீற கூடாது என்று விட்டார்.


அன்று நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு அமைந்தும் தவறவிட்டனர். அணியின் தலைவன் ஜூனியர் என்பதால். அதற்கு பின் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய பங்களிப்பை வெளிக்காட்ட வேண்டும் பாராட்ட பட வேண்டும் என்று நினைத்தனரே தவிர அணியின் வெற்றியை பள்ளியின் நிலையை யாரும் கருத்தில் கொள்ளவில்லை. இதை இப்படியே விட்டால் சரி ஆகாது என்ற முடிவுடன் ஆசிரியர் செயல்பட்டார். அடுத்த நாள் 500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது அதில் பள்ளியின் சார்பாக வினீத் பங்குபெற்றான். சிறப்பாக தடத்தில் ஓடி கொண்டிருந்தான். ஆசிரியர் கூறியதால் யாரும் அவனை உற்சாகபடுத்தவில்லை கைதட்டவில்லை. இது அவனின் கவனத்திற்கு வந்தது. சிறிது தடுமாறினாலும் முன்னேறி சென்று வெற்றி பெற்றான். ஆசிரியரிடம் இச்செயலுக்கான விளக்கம் கேட்ட போது இங்கே நீ புதிதாக ஓடுகிறாய் உன்னை இங்குள்ள யாருக்கும் தெரியாது உன்னால் ஓட முடியும் வெற்றி பெற முடியும் என்று உனக்கு தெரியும் ஆனால் நீ பார்வையாளர்கள் உன்னை ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் அல்லவா அது இல்லாமல் உன் வெற்றி முழுமை பெறாதது போல் தோன்றுகிறது அல்லவா யோசித்து பார். அப்படியானால் உன் வெற்றியில் இவர்களுக்கும் பங்கு இருக்கிறது தானே நீ வெற்றி பெற வேண்டுமானால் அவர்களின் துணை உனக்கு தேவைப்படுகிறது என்பது உண்மை தானே என்றார். மாணவர்கள் அமைதி காத்தனர்.


தான் மட்டும் என்ற எண்ணம் இருத்தல் கூடாது. ஒன்றுபட்டு ஒரு செயலை செய்யும்பொழுது வெற்றி கிட்டுகிறது மனம் நிறைகிறது. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறன் உள்ளது. நம் உடலில் கூட கைகள் கால்கள் இதயம் கண்கள் இப்படி ஏதேனும் ஒன்று தான் வேலையை செய்யாவிட்டாலும் நஷ்டமும் கஷ்டமும் நம் உடலுக்கு தான். நான் என்னை கூற வருகிறேன் என்று புரிகிறதா என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் ஒன்று சேர்ந்து "ஒற்றுமையே பலம் " என்றனர். ஆசிரியர் அடுத்த போட்டிகளுக்காக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !!


Rate this content
Log in