மதுவில்லா வாழ்க்கை
மதுவில்லா வாழ்க்கை


காட்டில் ஒரே அழுகையும் துக்கமுமாக இருந்தது. சிங்கராஜாவீட்டில் இளவரசன் மது அருந்தி இறந்து விட்டான் என்ற செய்தி வந்தவுடன் காடே துக்கமாக மாறியது.
மயில் வீட்டில் மயில் தனது பையனிடம் ஒழுங்கா இருக்கிற வேலையைச் செய்துட்டு இரு. வேலை செய்துட்டு அலுப்பு தீர குடிக்கிறேன்னு பெயர் செய்துட்டு செத்து போய்டாதே!
ராஜாவைப் பார்! அன்னைக்கு காடு முழுவதும் வருமானம் வரணும்னு குடியைத் திறந்து விட்டுட்டார். இன்னைக்கு அவர் வீட்டில் அதனாலேயே இழவு விழுந்திருக்கு! இதெல்லாம் தலைமையா இருக்கிறவங்களுக்கு கடவுள் தர்ற பாடம். கடவுளே இல்லைன்னு சொல்வாங்க! கோவில் கோவிலா வீட்டுப் பொம்பளைங்க போவாங்க! இதெல்லாம் எங்க கொண்டுபோய் முடியப்போவுதோன்னு அன்னைக்கே நினைச்சேன். இன்னைக்குத்தான் அது உறுதி ஆகியிருக்கு........
இரவு ரோந்து பணியில் வந்திருந்த அரசர் சிங்கம் இதைக் கேட்டுவிட்டார்.
மறுநாள் காடெங்கும் கரடி இனி யாரும் மதுகுடிக்கக்கூடாது. மீறி குடிப்பவர் சிரச்சேதம் செய்யப்படுவர். அரசும் இனி மதுவை காட்டிற்குள் அனுமதிக்காது என தண்டோரா போட்டது.
காடு எங்கும் கிடைக்கும் மூலிகைகளை வியாபாரப்பொருளாக்கி மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தது. காடே சிங்கத்தை வாழ்த்தியது