KANNAN NATRAJAN

Children Stories

3  

KANNAN NATRAJAN

Children Stories

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம்

2 mins
487


கதாபாத்திரம் என்றால் என்னடா!

கேட்ட ஆமையை முயல் வாயை மூடிக்கொண்டு சிரித்து கேலி பேசியது.

இன்னைக்கு குழந்தைகள்தினம்டா! நம்ம காட்டுப்பள்ளியில் யார் நன்றாகப் பேசுறாங்களோ அவங்களுக்கு பரிசு..அதுக்குத்தானே கேட்குறே!

இல்லை….எங்க பாட்டி சென்னையில் இருந்து ஃபோன் செஞ்சாங்க..அங்கெல்லாம் முயலைக் கூண்டில் அடைச்சு வைத்து உணவுக்கறி செய்வாங்களாம்… பாட்டி இங்கே இருக்கிற பள்ளிமாதிரி அங்கேயும் நினைச்சுட்டு பள்ளிக்கு போனாங்களாம். குழந்தைகள் தினத்திற்கு முயல் முகமூடியெல்லாம்மாதிரி போட்டுட்டு டான்ஸ் ரிகர்சல் ஆடினாங்களாம்…… அப்புறம் வீட்டில் வளர்க்கிற நாய்,முயல்,பூனை இவை குறித்து பேச குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தாங்களாம்!

நீ பார்த்த படத்திலே வந்து நடிக்கிறாங்க பாரு! அவங்களைத்தான் கதாபாத்திரம்னு சொல்வாங்க!

ஆமா! இதெல்லாம் சொல்லித் தருவாங்க! பந்து விழுந்ததை எடுக்கச் சொல்லித்தந்த நேரு பிறந்தநாள் கொண்டாடுறவங்களுக்கு பைப்புக்குள்ளே விழுந்த பையனை எடுக்க கருவி கண்டுபிடிக்க சொல்லித்தரமுடியாதா….டீச்சராலே முடியாதது ஒண்ணு இருக்கா என்ன!!

இதெல்லாம் எப்ப பார்த்தே! அதான் லைவ் டெலிகாஸ்ட் மீடியா ஃபுல்லா பரவுச்சே! நான்தான் டேப்லட் வச்சிருக்கேனே! அதுல எல்லா டீவியும் வருமே!

ஏண்டா! உனக்கு படிக்கத்தானே உன் அம்மா டேப்லட் வாங்கித் தந்தாங்க!

இதோ பார் முயலண்ணா! நான் படிக்கவும் செய்வேன். அந்த நேநரத்துல படமும் பார்ப்பேன். பள்ளி எட்டுமணிநேரம்தான். அதுல நான் ஒண்ணும் பார்க்கலை. ஞாயிறு மட்டும் அம்மா இரண்டுமணி நேரம் தருவாங்க! அப்பதான் பார்த்தேன். மீதி செய்தியெல்லாம் தாத்தாதான் சொன்னார்.

எின்னே எதற்கு கதாபாத்திரம் பற்றி பேச்சு! அதையும் நெட்டில் தேட வேண்டியதுதானே! உனக்கு யாரைப் பிடிக்கும்?

எனக்கு காட்டுல கரடி டீச்சர் படம் போட்டாங்க பாரு! ரஜினி படம் ஒண்ணு அதுல ஒரு அம்மா யானை, குட்டி யானை வரும் பாரு!! அதான் ரொம்ப பிடிச்ச பாத்திரம்………

அந்த அன்புதான் எங்கேயும் இருக்கு இல்லையா…அதை நீ உன் பள்ளியில் மறக்காமல் சொல்லு! சீக்கிரம் போ! வாத்து வாட்ச்மேன் லேட்டா போனா கேட்டை சார்த்திடப்போறாரு!

ஹா!ஹா!ஹா! இன்று கேட்டிற்கு லீவ்…நோ தடை..யாரு எப்ப வேணும்னாலும் வரலாம்.பாடங்களும் கிடையாது.

வேகமாக கிளம்பிய ஆமை பள்ளியை எட்டிப் பார்த்தது. யாரு வந்திருக்கப்போறா…….குள்ள நரி எப்பவும் தூங்கி எந்திருச்சு பத்துமணிக்குத்தான் வருவான்..என நினைத்தபடி வகுப்பறைக்குள் எட்டிப் பார்த்தது.

வகுப்பறை ஃபுல்லாக இருந்தது. சத்தம் போடாமல் ஆமை குள்ளநரிக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தது.

என்னடா! இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டே!

இன்னைக்கு குழந்தைகள் தினமில்லையா! அதான் .இன்னைக்கு யூனிஃபார்ம் கிடையாது. பாடம் கிடையாது. போட்டியெல்லாம் இருக்கு! நைட் முழுக்க தூக்கமே சந்தோஷத்துல வரலைடா! டெய்லி இப்படியே இருந்தா விளையாட்டுமுறையில் பாடம் சொன்னாங்கன்னா எவ்வளவு ஜாலியா இருக்கும்ல….

பேசாம ஃபின்லாந்து காட்டுப்பள்ளிக்கு போய்டுவோமாடா!

ஏண்டா?

அங்கெல்லாம் ரோபோ வச்சு விளையாட்டு முறையில் சொல்லித்தர்றாங்கடா!ஏழு வயசுல பள்ளி போனா போதும்……!

பேசாம இருடா! நீர்யானை டீச்சர் வந்திடுச்சு!

ஹூம்! இது தமிழ்நாடுடா!கிசுகிசுத்தது குள்ளநரி


Rate this content
Log in