கடந்து போகும்
கடந்து போகும்
" இந்த வருடத்தின் சிறந்த பெண் சாதனையாளர் அபி..." என நிகழ்ச்சி அறையில் சப்தம் ஒலிக்க கைத்தட்டலும் கூச்சலும் விண்ணை எட்டியது. அபி ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளம்பெண். உறவினர்கள் பெற்றோர்கள் என யாரும் அவளுக்கு கிடையாது. ஆசிரமத்தில் வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ராஜாவை தவிர வேறு யாரும் கிடையாது. ராஜாவும் அபியும் ஒரு தொழில் நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனர். அதில் ஆரம்பமான நட்பு சிறிது சிறிதாக காதலாக மாறியது. அபி ராஜாவின் தொழில் முதலீட்டில் நிறைய உதவிகள் செய்தாள். ராஜாவின் தொழில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க காரணம் அபி தான். ராஜாவிடம் அபி அடிக்கடி கூறும் ஒரு கவிதை
"யாருமில்லா உலகத்தில் எனக்கென வந்த உலகம் நீயடா... "
ஒருநாள் ராஜா கோபமாக இருந்தான். அபி கோபத்தை போக்க முயற்சி செய்தாள். கோபத்திற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள நினைத்தாள். ஆனால் ராஜா "உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா" எனக்கு கத்தி விட்டு சென்றுவிட்டான். அபி இரண்டு மூன்று நாட்களாக தொலைபேசியில் அழைத்து பார்த்தும் அவன் பதில் அளிக்கவில்லை.
ஒரு வாரம் கடந்தது. அபி உடன் வேலை செய்யும் ஒரு பெண் "அபி என்னுடன் உடனே வா" என்று அழைத்து சென்றாள்.
"எங்கே? "
" நீ வா சொல்லுறேன் "
இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர் ஒரு கல்யாண மண்டபத்திற்கு சென்றனர்.
"கெட்டி மேளம் கெட்டி மேளம்..." மங்கள வாத்தியங்கள் ஒலித்தது. அபியின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
" உன்னை ராஜா ஏமாத்திவிட்டான் அபி. இத்தனை நாள் பணத்திற்காகவும் அவனை தொழில் முன்னேற்றத்திற்காகவும் மட்டும் தான் உன்னிடம் நடித்து இருக்கிறான்." என்றாள் அந்த பெண்.
அவை கண்களை துடைத்துவிட்டு நேராக மேடைக்கு சென்றாள். இவளைப் பார்த்ததும் ராஜா திகைத்தான்.
"கல்யாண நாள் வாழ்த்துக்கள். இவளுக்கு ஆவது உண்மையான இரு" எனக்கூறிவிட்டு அபி மண்டபத்தை விட்டு வெளியேறினார். ஒரு நாள் முழுவதும் அபி தன் அறையை பூட்டிக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள். அன்று இரவு தன் நாளேட்டில்
"யாருமில்லா உலகத்தில்
எனக்கென வந்த உலகம் நீயடா...
இன்று திசைமாறி சுழற்கிறாயடா... "
என எழுதிவிட்டு நிலவை பார்த்தபடி கண் மூடினாள். இதுவும் கடந்து போகும் என நினைத்து நினைவுகளுடன் வாழ்க்கையை நகர்த்தினாள்.
