KANNAN NATRAJAN

Children Stories

4  

KANNAN NATRAJAN

Children Stories

கனவுகள்

கனவுகள்

2 mins
592


காட்டில் ஒரே அமர்க்களமாக இருந்தது. குடிக்க தண்ணீரே இல்லை. இதில் ராஜா என்ன தேர்தல் நடத்திக்கொண்டிருக்கிறார். மக்கள் போட்ட நெகிழி குப்பையினால் நாம் இன்று தண்ணீரி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம் என முயல் குரங்கிடம் அழுது புலம்பியது.


நீ ரொம்ப யோக்கியம்மாதிரி பேசாதே! மனிதர்கள் கடித்துப்போட்டஎச்சில்பீர் குடித்தவன்தானே நீ!

ஆமாம் என்னைச் சாப்பிட கூண்டுக்குள் வைத்திருந்தார்கள். அப்பல்லாம் எனக்கு கேரட் தரமாட்டார்கள். கொஞ்சம் தண்ணியில் பீர்தான் கலந்து வச்சாங்க! அப்புறம் குடிக்க வந்த ஒருத்தன் நல்லவேளையாக என்னைத் திறந்து எடுக்க முயற்சி செய்தப்ப தப்பிச்சு ஓடி வந்துட்டேன்.இதைப்போய் திட்டறியே குரங்கண்ணா! மதுவை ஒழிப்போம்னு கோஷமெல்லாம் போடணும். அப்பதான் எடுப்பானுங்க! குழாயைத் திருகி தண்ணீர் கடிக்கலாம்னு பார்த்தா காற்றுதான் புஸ்சுன்னு வருது!


சரி! இனி அவர்கள் குப்பை போட்டாலும் நாம் ஏரி,குளம் சுத்தமாக வைப்போம்.எவனாவது கேரிபேக்கோடு உள்ளே வந்தான்னா என் குடும்பத்துகிட்டே சொல்லி வைக்கிறேன்.பாய்ந்து பறிச்சுடுவாங்க!

என் குடும்பத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டுடச் சொல்றேன்.


அதோ வர்றான் பாரு! அவன்தான் கேரிபேக் சப்ளை பண்றான். அவனை நாலு கடிச்சு வை!

என்ன குரங்குகளே! சௌக்கியமா! இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி! அதான் பழங்கள் எல்லாம் வாங்கி வந்தேன்....

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எங்க தலைவர் உன்மேல் ரொம்ப கோபமா இருக்கார். அவருக்கு நாலு வடைமாலை சார்த்திடறேன்.


ஏய்! என்ன கடவுளுக்கே இலஞ்சம் தர்றியா?

ஒழுங்கா கேரிபேக் வியாபாரத்தை விட்டுடு.

தண்ணீரே இல்லை!

அவனவன் இலஞ்சம் கொடுத்தால் என் பொழைப்பு நடக்கும். என் கனவுகள் நிஜமாகணும்னா நான் இதை விற்றுத்தான் ஆகணும்.


என்ன உன் கனவு? என முயல் கேட்டது.

எங்கப்பாவுக்கு புற்றுநோய் வந்து செத்துட்டாரு, பாட்டிக்கும் அதே நோய்தான். அதான் மருத்துவமனை ஒன்று கட்டிட்டு இருக்கேன். எல்லாருக்கும் இலவசமாக வைத்தியம் பார்க்கணும். தாய்மொழி படிச்சுட்டு வர்றவங்கதான் அங்கே டாக்டரா இருப்பாங்க!. அதுதான் இந்த வியாபாரம் செய்யறேன் என்றான் வியாபாரி.


குரங்கு ‘கெக்கெ பிக்கெ” என விநோதமான சத்தம் கொடுக்கவே, குரங்கு கூட்டங்கள் வரிசையாக வந்தன. அவற்றின் கைகளில் மந்தார இலை தொன்னைகளும்,மண்குடுவைகளும்,பாக்கு மட்டைதட்டுகளும் இருந்தன. சோளதட்டுகளை வைத்திருந்த முயல். வியாபாரியைப் பார்த்து இதோபார் வியாபாரி! உன் நல்ல எண்ணத்திற்கு நாங்க குறுக்கே நிற்கலை!


அவனவன் அறுபத்தைஞ்சு இலட்சம்னு மெடிகல் சீட்டை ஏலம்போட்டு விற்கிற காலத்துல நீ இப்படி சேவை செய்யற மனப்பான்மையோடு இருக்கிறதைப் பாராட்டறேன். உன் நல்ல மனசுக்கு நாங்க எங்க பயன்பாட்டுக்கு வச்சிருந்ததைத் தர்றோம். இதை முதலீடா வச்சுக்கோ! நீ மருத்துவமனை கட்டி முடிச்சதும் திருப்பிக்கொடு..அதுபோதும் என குரங்கு கூறவே வியாபாரி மகிழ்ச்சியுடன் விலங்குகளுடன் ஜாலியாக சாப்பிட்டு மகிழ்ந்து வியாபாரத்தைத் தொடங்க நகருக்குக் கிளம்பினான்.



Rate this content
Log in