கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்


கலெக்டர் தனது வீட்டு கிறிஸ்துமசிற்காக விதவிதமாக வீட்டை அலங்கரிக்க ஆட்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருந்ததை தூரத்தில் அணிலும்,குரங்கும் பார்த்தன.
மனிதர்கள்தான் கிறிஸ்துமஸ் கொண்டாடணுமா?
அதெல்லாம் இல்லை அணில்
நாமளும் கொண்டாடலாம்...
சரி!
அதற்கு என்ன தேவை?
உழைத்து சம்பாதித்து வாங்கிய பொருளில் ஒரு குடில் கட்டவேண்டும். ஒரு ஸ்டார் கட்டுவார்கள். சாண்டா தாத்தா அப்போதுதான் வருவார்.
அந்த கலெக்டர் அப்படித்தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறாரா?
உனக்கென்ன அதைப்பற்றி கவலை?
கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழி கேட்டாய்..சொன்னேன்...அவ்வளவுதான்!
என்னைப் பார்த்தாலே கடைக்காரர் கதவை இழுத்து சார்த்தினார்.
நீ போனால் வாழைப்பழத்தை எல்லாம் தின்றுவிடுவதாக ஒரே கம்ப்ளெயிண்ட்.
சரி! இனிமேல் கொடுத்தால் சாப்பிடுகிறேன்.அன்னைக்கு ஐசிங்கேக்குன்னு ஒண்ணு ஒரு பெண் கொடுத்தாள்னு சாப்பிட்டேன். ஒரே முட்டை நாற்றம். உடனே வாயைக் கழுவ வேப்பிலை வைத்து தேச்சுட்டேன்.
உனக்கு அதெல்லாம் ஒத்துவராது. யுட்யூபில் முட்டை இல்லா கேக் வருது பார்!
மைதாவிற்கு எங்கே போவது!
அதெல்லாம் ரேஷனில் கோதுமை,சர்க்கரை தருவார்கள்.
அது மனிதர்களுக்கு..உனக்கில்
லை.!.
இனி சிங்கராஜாவிடம் சொல்லி நாமும் அதுபோல செய்துவிடலாம்.
சரி! ஆனாலும் டெகரேஷனுக்கு மனிதர்கள் கடைக்குத்தானே போகணும்.
இப்ப ஏசு பொம்மை,குடில்,கேக் செய்ய பணம் இதுக்கு உழைச்சு பணம் எடுத்தட்டு வர்றேன் என குரங்கு மரத்துக்கு மரம் தாவி ஓடியது.
காட்டில் பலா மரத்திடம் சென்றது. பலா மரமே! எனக்கு ஒரு பழம் தருவாயா?
அதற்கு நீ என்ன தருவாய்?
என்னிடம் ஒன்றுமே இல்லையே!
சரி! அப்ப ஒண்ணு செய்! குடம் எடு! அருகில் உள்ள கிணறிலிருந்து தண்ணீர் எனது மரத்திற்குஊற்றினால் பழம் தருவேன் என்றது.
குரங்கும் பத்துகுடம் நீர் இறைத்து ஊற்றியபின் பலா மரத்திடம் பலாப்பழம் பெற்றது. எடுத்துக்கொண்டு சந்தையில் நரிவியாபாரியிடம் பண்டமாற்று செய்து கேக்,ஏசுபொம்மை,டெகரேஷன்பொருளை வாங்கியபடி அணிலைப்பார்க்கச் சென்றது.
அதற்குள் அணில் பூ,மரக்கிளை இவற்றைப் பயன்படுத்தி அழகான குடிலைச் செய்திருந்தது. இலவம்பஞ்சு மெத்தையில் குரங்கு வாங்கி வந்திருந்த ஏசு பொம்மையை வைத்தது.
அணில்ஜிங்கிள்பெல்! ஜிங்கிள்பெல்! என உற்சாகத்துடன் பாட கரடி சாண்டா ஓடோடி வந்து குரங்குக்கும்,அணிலுக்கும் மிட்டாய்களும்,கேக்குகளும் பரிசாக வழங்கினார். காடே கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்திருந்தது