இலஞ்சம்
இலஞ்சம்


கையில் என்ன மூட்டை?
அது ஒன்றும் இல்லை.
மறைக்காதே பூனை…
இல்லை முயல். நம்ம காண்டாமிருக ஆசிரியருக்கு கொஞ்சம் மீன் எடுத்துட்டு போறேன்.
எதுக்கு?
சும்மாதான்.பரீட்சை அடுத்தமாதம் வருதுல்லை. அதான் அம்மா கொடுத்துவிட்டாங்க. அவங்ககாலத்துலயும் அப்படித்தானாம்…….
இப்படி நீ மார்க் வாங்கி என்ன சாதிக்கப்போகிறாய்?.
வேலைவாய்ப்புக்கு அடிப்படை மதிப்பெண்தானே!
யார் காப்பி அடிச்சோ,ஆசிரியரை வைத்து மதிப்பெண் திருத்தியோ வந்தாங்கன்னா பார்க்கிறாங்க……..
இது நம்ம சிங்கராஜா பிரின்சிபாலுக்குத் தெரியுமா?
அவரே அவர் பிள்ளையை நீட் எக்சாம் எழுத அவரு பிள்ளைக்கு பதிலா வேறு ஒரு ஆளை அனுப்பிச்சாராம்….
மாட்டிக்கிட்டு திரு!திருவென முழிக்கிறாரு……
அப்ப நம்ம டீச்சர் கனகா சொன்னதைஎல்லாம் கடைபிடிக்கமாட்டாயா?
போடா! உண்மைக்கும்,நேர்மைக்கும் ஏதுடா இது காலம்…உலகம் முழுவதும் இன்று இப்படித்தான் போகிறது. சும்மா பெயருக்குத்தான்டா காந்தி காப்பிஅடிக்காமல் வந்த கதையைப் படிப்பதும்,காமராசர்,நேரு,கக்கன் கதையைப் படிப்பதும்…வாழ்க்கை என்பது வேறு என்று பச்சோந்தி டீச்சர் சொல்லவில்லையா?
அப்ப நீ படிக்காமல் இதோ கல்போல செயலற்றே இருந்திருக்கலாமே!
யார்றா பேசியது? சுற்றமுற்றும் பூனை தேடியது.
நான்தான் மாமரம் பேசுகிறேன். நான் நடுவீதியில் இருக்கிறேன். என்னைச்சுற்றி எத்தனைபேர் பயனடைகின்றனர். அதுதான் நமது பிறப்பின் அடையாளம். அடுத்தவருக்குப் பயன் தருகிறோமா இல்லையா எனக் கடவுள் பார்த்துக்கொண்டிருப்பார். இப்பிறவி முடிந்தவுடன் நாம் செய்யும் பாவ புண்ணிங்களுக்கு ஏற்ப வானில் மழை பொழியும்போது பிறப்போம்.
இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் மாமரமே?
எனது நிழலின் கீழ் ஒருநாள் ஒரு பெரியவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த புத்தகத்தில் அவ்வாறு எழுதி இருந்தது. இந்ததடவை மழை பெய்தபோது கீழாநெல்லி முளைத்தது. போன வருடம் அருகம்புல்லாக முளைத்தது. யாரும் விதைபோடாமலே தானாக அவரவர்பிறப்பின்படி நடந்துகொண்டிருக்கும்போது இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஏன் தவறு செய்து வாழ வேண்டும்?
அந்த மாணவர்கள் பள்ளி மிகவும் பழுதடைந்திருந்தது. கழிவறைகூட இல்லை. இருந்தாலும் அத்தனைபேரும் படித்து சிறப்பான பணியில் இருப்பதாக அந்்த பெரியவர் இரண்டு நாட்களுக்கு முன் இந்த மரத்தடியில் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.
குறிப்பா யாருமே இலஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ மாட்டோம்னு உறுதி செய்தவர்களாம்.
அரசு பள்ளியில் படித்து வந்ததால் குறைந்தபட்சம் ஐந்து வருடம் தாய்நாட்டிற்காகப் பாடுபடுவேன் என ஆசிரியர் சொன்னதற்கேற்ப நடந்துவருகிறார்களாம். அதில் அந்த ஆசிரியருக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?
பூனை முயலின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடியது.
இந்த மாமரத்தின் பேச்சைக்கேட்டால் நீ முன்னேறவே மாட்டாய்.
இன்று இலஞ்சம் கொடுக்காமல் வாழமுடியுமா? சும்மா அது பேச்சைக்கேட்காதே!
விடு பூனை! ..நானும் மாமரம் சொல்லியபடிதான்வாழப்போறேன். பூமி நேர்மையாக இல்லாவிட்டால் எல்லோரையும் மொத்தமாக அழித்துவிடுவாள் என ஆசிரியரைத்தேடி ஓடியது.