யாவும் எழிலே
யாவும் எழிலே
சின்னஞ்சிறு சிட்டும்
கன்னங்கரு காக்கையும்
கட்டிடும்
தொங்கும் தோட்டம்
குச்சிகளின் மெத்தையும்
எழிலே!!!!!!
அறு அடி உயரம்
கொண்டு உரக்க
பேச்சும்
சிறு சிறு நகைப்பும்
எழிலே!!!!
கையளவு கூட
இன்றி
செவி சாய்த்து
நித்தமும் கேட்கச்
செய்யும்
குருவியின்
குரலும் எழிலே!!!!!
எதிர்பார்ப்பு யாவும்
இன்றி
வெளிப்பாடும்
காட்டத்தெறியாத
பேரன்பால் பிணைந்திருக்கும்
விலங்குகளும்
எழிலே!!!!
இந்த அச்சற்ற
பிரபஞ்சம்
என்று விழுமோ என
அறியாது
அன்பின் ஊடலில்
பிணைந்திருக்கும்
மனித உயிரும்
எழிலே!!!!
கருமையை மூலமாய்
கொண்டு
அகிலத்தையே ஆட்டி
வைக்கும்
பகலவனும்
எழிலே!!!!!!
எல்லாம் எழிலே!
யாவும் எழிலே!!
பார்ப்பவர் கோணத்தில் பலவும் எழிலே!!!!
