நூற்றுக்கு நூறு
நூற்றுக்கு நூறு

1 min

3.3K
சிவப்பு ரோஜாக்கள்
அனைத்தும் உனக்காக
பூத்திருந்தன என்று
குளிரூட்டிய அறைக்குள்
நுழைந்த நான்
திரையுலக கண்ணாடி மாளிகையில்
உன்னுடன் கனவில்
நடனமாடிய நினைவில்
பறிக்க நினைத்த
சிவப்பு ரோஜாக்கள்
வெல்வெட்மாயை ரோஜாக்கள்
காதலின்வலிபோல
சிவப்புரோஜாதந்த வலியும்
அதிகம்தான் என்றாலும்
நிஜத்தை உணர்த்திய பதின்மவயது
காதல் அவசரங்கள் புரிந்த
உண்மைகளின் வெளிச்சத்தில்
உனது எட்டாம்வகுப்புமதிப்பெண்ணும்
எனது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணும்
நூற்றுக்கு நூறு!!