STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Others

3  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Others

முதுமை.

முதுமை.

1 min
221

முதுமை வரி(வலி)கள்


உழைத்து உழைத்து 

அழிந்தது அவளின் 

உள்ளங்கை ரேகை.


கடந்துப்போனது வயது

காற்றைப்போல

அழிந்த ரேகையும் 

சேர்ந்தது முகத்தில்..



அவளின் உழைத்து காய்த்துப்போன

கைகளுக்கு அடையாளம்

அவளின் முகத்தில் 

உள்ள வரிகளே.


அந்த வரிகள் பலவித

வலிகளை கண்டது........

பெற்றெடுத்த வலி

பத்தின் மேல்!

சுமந்த சுமையின் வலி

நூற்றின் மேல்!!

உழைத்ததன் வலி

ஆயிரத்தின் மேல்!!!

வயோதிகத்தின் வலி

லட்சத்தின் மேல்!!!!!!

அவள் கண்டது.......



வலிகள் யாவும் பறந்திடும் 

அவளுக்கு.

அவளின் புலம்பல்களை 

செவிகொடுத்து 

கேட்க ஆள் இருந்தால் 

மட்டுமே.......



Rate this content
Log in