Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Children Stories Inspirational Children

4  

Chidambranathan N

Children Stories Inspirational Children

குழந்தைகளின் சிறப்பான அம்மா

குழந்தைகளின் சிறப்பான அம்மா

1 min
221


ஒவ்வொரு இல்லத்தின் நிர்வாகத்தினையும் குழந்தைகளையும் திறமையுடன் நிர்வகித்துவருபவள் அம்மா!

குழந்தைகளின் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவள் அம்மா!

ஒவ்வொரு குழந்தைக்கும் கடவுளாகத் தெரிபவள் அம்மா!

குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் விளையாடிடத் தன் குழந்தைகளை அழகுபடுத்திக் கொடுப்பவள் அம்மா!

தன் குழந்தைகளின் நலனிற்காக அதிகாலையில் எழுந்து தொடர்ந்து உழைப்பவள் அம்மா!

குழந்தைகளின் அழகிய வார்த்தைகளைப் பொறுமையுடன் ரசித்துக் கேட்பவள் அம்மா!

குடும்பத்தின் ஒளிவிளக்காகத் திகழ்பவள் அம்மா!

குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் தேவையான உணவினைத் தருபவள் அம்மா!

குழந்தைகளின் உடல் நிலையினைத் தொடர்ந்து கவனித்துப் பேணிக்காப்பவள் அம்மா!

சிறு குழந்தைகளுக்குத் தாய் மொழியினையும் உலக அறிவினையும் முதன் முதலில் கற்றுக் கொடுப்பவள் அம்மா!

குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்காகத் தொடர்ந்து பணத்தினைச் சேமித்து வைப்பவள் அம்மா!

குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபடுபவள் அம்மா!

ஒவ்வொரு குழந்தையும் உச்சரிக்கும் முதல் வார்த்தை அம்மா!

ஒவ்வொரு குழந்தையும் கருவில் வளரும்பொழுது அந்தக் குழந்தையினை நினைத்து மகிழ்ச்சியடைபவள் அம்மா!

ஒவ்வொரு குழந்தையையும் பத்து மாதம் சுமந்து பெற்றெடுப்பவள் அம்மா!

இரவும் பகலும் தொடர்ந்து பாடுபட்டுத் தன் குழந்தையினைத் தொடர்ந்து பாதுகாப்பவள் அம்மா!

ஒவ்வொருவரும் அன்புடனும் பாசத்துடனும் தொடர்ந்து அன்புச் செலுத்தவேண்டிய உறவு அம்மா!


Rate this content
Log in