இனிய சுதந்திரத்தின் எழுச்சி
இனிய சுதந்திரத்தின் எழுச்சி

1 min

186
இனிய சுதந்திரத்தின் எழுச்சி!!
இனிய விழிகளில் ஈரம் பொங்குதே
இன்முகமோ இம்மியளவு மாறாமல்
இரட்டிப்பு புன்னகையை வீசுதே!
நெஞ்சை நிமிர்த்தியே விடு நீ
நேசத்தை வீசியே விடு நீ
எத்தனை உயிர் தியாகங்கள்
எத்தனை கண்விழி போராட்டங்கள்
எத்தனை உதையும் அவமானமும்
அத்தனையும் கானல் ஆனதே
மூவர்ணத்தை உச்சரித்த உதடுகள்
மூர்கத்தை துறந்து அமைதியினுள்
அகிம்சையே ஆடையானதே யாவருக்கும்
உடைந்த பனிக்குடத்தினுள் இசைத்ததே
சுதந்திர கீதம்
சுள்லென்று உச்சி வேர்த்ததே
சுதந்திர காற்றை வெள்ளாடையின் அடிமை எண்ணத்தை துரத்தியடித்து
சுவாசிக்க தான்!!