எத்தனை நூலகம் உன்னுள்
எத்தனை நூலகம் உன்னுள்
1 min
198
எத்தனை நூலகம் உன்னுள்!
தன்னை உருக்கி வையத்தை
மின்னச்செய்வாய்!
உன்னுள் எத்தனை தன்னம்பிக்கை
உன்னுள் எத்தனை தியாகம்
ஊனும் உயிராக நீயே மாறுகிறாய்
ஏழ்மையின் வாழ்வாதாரமாக மாறுகிறாய்!
ஏணிகள் கொண்ட நிழலும் நிசமும்
கொஞ்சம் உன் தயவை நாடுமே
பிறரின் வாழ்வை ஒளியேற்றும்
தாயின் உருவமாக சில நேரம்
மாற்றம் கொள்வாய்!
ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு
வாழ்க்கை தத்துவத்தை விதைத்தே
செல்லுதே
மெழுகுகே நீ ஒரு அகராதி!
ஸ்டெல்லாமேரி எம் ஜே
புதுவை
