வண்டலூர் பூங்கா
வண்டலூர் பூங்கா


வண்டலூர் பூங்கா வந்தால் சொல்லுங்க! நான் இறங்கணும்!
கேட்ட சிறுவனை ரோசி விழித்துப் பார்த்தாள். அவளே இப்போதுதான் வருகிறாள். இந்த பையன் நம்மிடம் கேட்கிறானே என எனக்குத் தெரியாதுப்பா! என்றாள். என்ன வேலையாகப் போகிறாய்? என்றாள்.
மழை ரொம்பப் பெய்யுது! அங்கே விலங்குகள்,பறவைகள் மழையில் நனையுதா இல்லையான்னு செக் பண்ணப் போகணும். எதுக்கு உனக்கு அது?
எங்க பள்ளியில் சுற்றுலா சென்ற இடம் குறித்து வீடியோ எடுக்கச் சொல்லி இருக்காங்க! எனக்கு அப்பா,அம்மா யாரும் கிடையாது. அரசு பள்ளியில்தான் படிக்கிறேன். பக்கத்து வீட்டுப் பையன் கிட்டே இந்த ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கிட்டு வந்திருக்கேன். தலைப்பு விலங்குகள்,பறவைகளைக் காப்போம்!
உங்க டீச்சர் சொல்லித் தருகிறார்களா?
எங்க டீச்சர் கொரானா காலத்திலும் விடாமல் பாடம் வீட்டிற்கு வந்து சொல்லித் தராங்க! அவங்க பணத்தில் எனக்கு உணவெல்லாம் தந்தாங்க!
பள்ளி நாட்கள் இல்லாத இக்காலத்தில் இப்படி ஒரு டீச்சரா?
நீங்கள் தப்பா நினைச்சிட்டீங்க! இவங்க என் ட்யூஷன் டீச்சர். மாதம் 500 தருகிறேன். எல்லா பாடமும் முடித்துத் தருகிறார்கள். தனியார் பள்ளியென்றால்ஃபீஸ் அதிகம் என்று சொல்லியபடி பஸ் ஸ்டாப்பிங் வரவே இறங்கி பூங்காவிற்குள் நுழைந்தான். அவன் எதிரில் ஒரு வரிக்குதிரை வந்து நின்றது.
குதிரையே! நான் படம் எடுக்கிறேன். கொஞ்சம் நில்லேன் என்றான். போடா! மழை வேற தூறல் போடுது! போய் மயில் கிட்டே கேளு! அவளுக்குத் தான் அழகின்னு பெருமை. படிக்கப்போகிறேன் நான் என்றது வரிக்குதிரை. என்னது! படிக்கப்போகிறாயா! படிக்காதவர்கள் விலங்கிற்குச் சமம் என்பார்களே! நானும் அடுத்த பிறவியிலாவது உன்னைப்போல மனிதனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன். தார் அடித்ததுபோல ஒரு கலர். உங்களுக்கெல்லாம் அம்மா சோறு தராங்க! எனக்கு யார் தருகிறார்கள். நானே தேடி உண்பது போரடிக்கிறது.
சிறுவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பறவைகள்,விலங்குகள் கவலையில்லாமல் வாழலாம். படிக்காமல் மொபைல் பார்த்து பொழுதைக்கழிக்கலாம் என்று பார்த்தால் இந்த வரிக்குதிரை நம்மைப்போல வாழ ஆசைப்படுகிறதே! நாம் இனி படிப்பைப் பார்க்வேண்டும் என நினைத்தபடி வீடு சென்றடைந்தான்.