STORYMIRROR

Ananth Sivasubramanian

Children Stories Inspirational Children

4  

Ananth Sivasubramanian

Children Stories Inspirational Children

பேராசை

பேராசை

1 min
367


ஒரு ஊரில் ராமு, சோமு என இரு நண்பர்கள் இருந்தனர். ராமு மிகவும் நல்லவன்.  சோமுவிடம் நல்ல குணங்கள் இருந்தாலும் ஆசை அதிகம் உடையவன்.  


ஒரு நாள் அவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு நாணயத்தைக் கண்டனர். சோமு அதை எடுக்க போனான். ராமு தடுத்தும் கேட்கவில்லை. அது ஒரு மந்திர நாணயம்.  அதைக் கையில் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்த நாணயம் "நான் தினமும் ஒரு நாணயம் உனக்கு தருகிறேன்" என்று கூறியது. அப்பொழுதும் ராமு தடுத்து பார்த்தான். ஆனால் சோமு அதற்கு ஒப்புக் கொண்டான். ராமுவிடம் "நமக்கு நாணயம் கிடைத்தால் என்னவெல்லாம் வாங்கலாம் அதற்கு போய் தடை சொல்கிறாயே" என்றான். அதற்கு ராமு உழைத்து கிடைக்கும் பணமே ஒட்டும் என்றான்.

சில நாட்கள் சென்றன. அந்த நாணயமும் தினமும் ஒரு நாணயத்தை தந்தது. சோமுவும் மகிழ்ச்சியாக அதை சேர்த்து வந்தான். அவனுள் ஒரு ஆசை வந்தது. இந்த நாணயத்தை இரண்டாக உடைத்தால் இரண்டு இரண்டு காசாகா கிடைக்குமே என்று எண்ணி அதை இரண்டாக உடைத்தான். ஆனால் மறு நாள் ஒரு காசு கூட கிடைக்கவில்லை. தான் செய்த தப்பை உணர்ந்தான். ராமுவிடம் தான் செய்ததை சொன்னான். அதற்கு ராமு "அன்றே சொன்னேனே. பேராசையைத் தூண்டியது அந்த. நாணயம். பேராசை பெரு நஷடம் என்னும் பழமொழி உண்மையாகி விட்டது. இனிமேல் இதைப் போல் ஆசைப்படாதே" என்றான். சோமுவும் தன் பேராசை குணத்தை திருத்திக் கொண்டு "நான் இனி பேராசை பட மாட்டேன்" என்றான்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை