அழகிய மழை காலம்
அழகிய மழை காலம்
அது ஒரு ஞாயிறு மாலை நேரம். மழை 'சோ' வென பெய்துக் கொண்டிருந்தது. சாலையின் ஒரத்தில் அருவி போல் மழை நீர். வானில் ஒளிக்கீற்று போல் மின்னல் சிங்கத்தின் முழக்கத்தை போல இடியின் ஒலி அந்த மழையை ரசித்துக் கொண்டிருந்தான். இடி மின்னலுடன் கன மழை.
அவன் அம்மா மின்னலெல்லாம் பார்க்காதே உள்ளே வா என்று அழைத்தார். அவன் இடி மின்னல் எவ்வாறு ஏற்படுகிறது.அம்மா ஏன் அவ்வாறு சொல்கிறார் என்று சிந்தித்தான். இணையத்தில் தேடலாம் என்றால் மின் இணையத்தில் தேடலாம் என்றால் மின் இணைப்பு இல்லை.அம்மாவிடம் கேட்டான்.அதற்கு அவன் அம்மா மின்னலின் வேகம் அதிகம் இடியின் வேகம் குறைவு என்றும் மின்னலின் ஒளி கண்ணை பாதிக்கும் என்றும் கூறினார். அவனுக்கு இன்னும் இடியும் மின்னலும் எவ்வாறு உருவாகிறது எதனால் மின்னலின் வேகம் அதிகம் என ஆழமாக அறிந்து கொள்ள விரும்பினான்.
மறு நாள் விடுமுறை அறிவித்தார்கள். மகிழ்ச்சியாக விளையாடி விட்டு நூலகத்திற்கு சென்று அவன் சந்தேகத்திற்கு விடை தேடினான். அங்கும் அவனுக்கு புரியும்படியாக விடை கிடைக்கவில்லை. வீட்டிற்கு வரும் வழியில் தாழ்வு பகுதியெல்லாம் தண்ணீர். பாவம் அப்பகுதியில் உள்ள மக்கள் என்று எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான். நாளை அறிவியல் ஆசிரியரிடம் சென்று கேட்க வேண்டும் என எண்ணிய படியே உறங்க சென்றான்.மறுநாள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் சென்று தன் சந்தேகத்தை வினவினான்.
அவனுடைய ஆசிரியரும் பொறுமையாக விளக்கினார். மேகங்களும் எல்லா பொருட்களைப் போல் மின்துகள்களைக் கொண்டது. இரு வேறுபட்ட மின்துகள்களைக் கொண்ட மேகங்கள் மோதும் போது இடியும் மின்னலும் உருவாகின்றன. எப்படி இரு கற்ளைத் தேய்க்கும் போது நெருப்பும் சத்தமும் உண்டாகிறதோ அதே மாதிரி என்றார். குருவிற்கு இப்போது தெளிவாக புரிய ஆரம்பித்தது. பிறகு அவரே தொடர்ந்து ஒளியின் வேகம் (300000km/s) ஒலியின் வேகத்தை (1225km/s) விட அதிகமாக உள்ளதால் நாம் முதலில் மின்னலைப் பார்க்கிறோம் அதைத் தொடர்ந்து இடியைக் கேட்கிறோம் என்றார் அம்மா சொன்னது போலவே. ஆனால் மின்னலின் ஒளி சில சமயத்தில் கண் பார்வையை பறித்து விடும் என்றார். அதே போல் இடி இடிக்கும் போது மரத்தின் அடியில் நிற்கக் கூடாது இடி தாக்கி உயிரிழக்க நேரிடும் என்றார். இப்பொழுது குருவிற்கு தெளிவாக புரிந்தது.
அவன் சிந்தித்தான் இயற்கையின் விந்தையை நினைத்து வியந்தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமே. அதே போல் தான் மழையும் அதிகமான மழை வெள்ளத்தையும் இடி மின்னலும் ஆபத்தை உண்டாக்கும் என்னே இயற்கையின் விந்தை என எண்ணியவாறு வீட்டை நோக்கி நடந்தான்.
