இனிமையான தீபாவளி
இனிமையான தீபாவளி
ஒரு ஊரில் ராமு சோமு என இருவர் வாழ்ந்து வந்தனர். ராமு ஒரு ஏழை. ஆனால் சோமுவோ ஒரு செல்வந்தன். தீபாவளி அன்று ராமு பணம் இல்லாததால் பட்டாசு வாங்க இயலவில்லை. சோமுவோ விதவிதமான பட்டாசுகள் வாங்கி வெடித்து கொண்டிருந்தான். ஒருவர் பட்டாசு வெடிப்பதைப் பார்க்கும் போது நமக்கும் ஆசை வருவது இயற்கை தானே. சிறுவன் ராமுவுக்கும் பட்டாசு வெடிக்கும் ஆசை சோமுவைப் பார்த்து வந்தது. அவன் சோமுவிடம் "எனக்கு ஒரு பட்டாசு கொடுக்கிறாயா நானும் வெடிக்கிறேன்" என்று கேட்டான். அதற்கு சோமுவோ "நான் தரமாட்டேன்" என்று சொன்னதுடன் அங்கிருந்து போகுமாறு கூறினான். ராமு "நான் பார்க்கவானு செய்யறேனே" எனக் கேட்டான். "சரி ஆனால் எதையும் தொடக்கூடாது" என்றான். ராமு பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பட்டாசினால் அருகில் இருக்கும் கீழே இருந்த தென்னை மட்டையில் பட்டு திகு திகுவென எரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்த சோமுவுக்கோ என்ன பண்ணுவது எனத் தெரியாமல் அலற ராமுவோ சிறிதும் யோசிக்காமல் அந்த தீயை விரைந்து செயல்பட்டு அணைத்தான். சோமு ராமுவின் உதவியைக் கண்டு மகிழ்ந்து நன்றி கூறியதுடன் அவனை வீட்டிற்குள் அழைத்து குடும்பத்தாரிடம் அறிமுகப் படுத்தினான். பின் இருவரும் சேர்ந்து
பெரியவர் மேற்பார்வையில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று எண்ணாமல் ராமு சோமுவுக்கு உதவியது
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நண்ணயம் செய்து விடல்
எனற திருக்குறளை நினைவு படுத்துகிறது.
பசுமையான தீபாவளி
பாதுகாப்பான தீபாவளி
