STORYMIRROR

Ananth Sivasubramanian

Children Stories Comedy Classics

4  

Ananth Sivasubramanian

Children Stories Comedy Classics

மரமாவது நட்டாயா

மரமாவது நட்டாயா

2 mins
437

ஒரு ஊரில் சுப்பிரமணி என்ற அலட்சிய மனிதன் இருந்தான். அவனுக்கு வயது 25. அவன் எந்த வேலையும் சரியாக செய்ய மாட்டான். அவனுடைய தயார் சொல்லும் அறிவுரைகளை கேட்க மாட்டான்.

சுப்பிரமணி, தன் இரு சக்கர வாகனத்தை மிக வேகமாக ஓட்டுவான். எப்பொழுதும் அவன் சமிக்கையை(சிக்னலை) மதித்ததே இல்லை. சட்டென்று ஒரு தண்ணீர் சரக்குந்தில்(லாரி) மோதினான். “அ ஆ, வலிக்கிறது” என்று கத்தியபடியே மேகமூட்டத்துக்குள் நுழைந்தான். தான் விபத்தில் இறந்தது அவனுக்கு புரிந்தது. இறப்பும் அதன் வலியையும் உணர்ந்தான். தன் அலட்சிய குணத்தை நினைத்து அழுதான்.

அவன் சுவர்கத்துக்கும் நரககத்துக்கும் நடுவில் நின்றிருந்தான். அப்போது ஒரு கவலை எழுந்தது, “நான் சொர்க்கத்துக்கு செல்வேனா அல்லது நரகத்துக்கு செல்வேனா” என்று நினைத்தான். “எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது” என்று கூறிக்கொண்டே நடந்தான்.அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. கடைசியாக நீண்ட வரிசையில் நின்றான். சில மணி நேரம் கழித்து சுப்பிரமணியை எமதர்மராஜா கூப்பிட்டார்.

யமதர்மராஜாவின் நேர்காணலில் (இன்டெர்வியூ) தேர்வானால் மட்டுமே ஒருவர் சொர்க்கம் செல்ல முடியும். “இந்த நேர்காணலின் மாதிரி வினாக்களோ (சாம்பிள் குவஸ்தின்ஸ்) அல்லது கடந்த ஆண்டுகளின் வினாத்தாள் கிடைத்தால் நன்றாக இருக்கும்”. என்று நினைத்தான். யமதர்மராஜா சுப்பிரமணியை கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

யமதர்மராஜா: நீ எப்பொழுதாவது பிச்சை கொடுத்திருக்கிறாயா?

சுப்பிரமணி: இல்லை சுவாமி, அது சோம்பேறிகளை உருவாக்கும் செயல்.

யமதர்மராஜா: உணவை பகிர்ந்து சாப்பிட்டாயா?

சுப்பிரமணி: இல்லை சுவாமி, அது சுத்தமாக இருக்காது.

யமதர்மராஜா: இரத்த தானம் செய்திருக்கிறாயா?

சுப்பிரமணி: இல்லை சுவாமி, அது வலிக்கும்.

யமதர்மராஜா: ஒரு மரமாவது நட்டாயா?

சுப்பிரமணி: ஆம் சுவாமி, ஒரு காசு மரம் (பண ஆலை) நட்டிருக்கேன்.

யமதர்மராஜாவுக்கு கோபம் வந்தது.

“சுவாமி என்னை மன்னித்து, தயவு செய்து சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்” என்றான் சுப்பிரமணி.

“தாயை மதிப்பதில்லை!

செய்யும் செயலில் கவனமில்லை!

சமிக்கையை மதிப்பதில்லை!

பிச்சை இட்டதில்லை!

உணவை பகிர்ந்ததில்லை!

இரத்த தானம் செய்ததில்லை!

உன் வண்டியையும் ஒழுங்காக ஓட்டவில்லை!

கடைசியாக ஒரு மரம் கூட நட்டதில்லை!

நீ என்ன என் மாமனா மச்சானா?

மானங்கெட்டவனே!

எதற்கு கேட்கிறாய் சுவர்க்கம்?

யாரை பார்த்து கேட்கிறாய் சொர்க்கம்?

செல் நரகத்திற்கு” என்று கட்டபொம்மனை போல் பேசினார் யமதர்மராஜா.

அடுத்த நொடியில் அவன் நரகத்தில் இருந்தான். யமதர்மராஜா ஒரு வேலைக்கு ஆயிரம் தோப்புக்கரணம் போடக்கூறினார்.

அப்போது “டம் டூம்” என்ற சத்தத்தோடு கீழே விழுந்தான். கனவு கலைந்தது! “நல்ல வேளை இது கனவு” என்று அவன் மகிழ்ந்தான். அவனுடைய கனவை பற்றி அம்மாவிடம் விவரித்தான். அன்றே அவன், தாய் சொல்லை கேட்பது, அலட்சியத்தை விடுவது மற்றும் ஒரு மரத்தை நடுவது என்று முடிவெடுத்தான். அவன் வாழ்க்கை செழிப்பாக மலர்ந்தது. இரத்ததானம் செய்ய ஆரம்பித்தான். பிச்சை போட ஆரம்பித்தான். உணவை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.

நீங்கள் ஒரு மரமாவது நட்டு இருக்கீர்களா? இல்லை என்றால் அதில் இருந்து நீங்களும் ஆரம்பியுங்கள். உங்கள் வாழ்க்கையும் மலரட்டும்.


Rate this content
Log in