கொரோனாவை வெல்வோம்
கொரோனாவை வெல்வோம்
இரண்டு வருடமாக வீட்டுள்ளேயே இருந்தோம்.வெளியே செல்ல பயமாக இருந்தது. பள்ளிக்கு கூட செல்லவில்லை.கணிணி மூலமாகவே கல்வி கற்கிறோம்.நண்பர்களுடன் விளையாட பயமாக இருந்தது.இதற்கெல்லலாம் காரணம் கொரோனா நோய் தான்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு நானும் என் தங்கையும் விளையாடுவதற்க்கு சென்றோம்.நண்பர்களும் விளையாட வந்திருந்தார்கள்.நண்பர்களை இரு வருடத்திற்க்கு பிறகு பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தோம்.
நண்பர்களை உன்னித்து பார்த்ததும் தான் தெரிந்தது யாரும் முகக்கவசத்தை சரியாக அணியவில்லை.சில நண்பர்கள் முகக்கவசத்தையே அணியவில்லை.மற்றும் சிலர் முகக்கவசத்தை கழுத்தில் அணிந்திருந்தனர்.நண்பர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இப்படியே பல நாட்கள் சென்றன.திடீரென்று ஒரு நாள் என் நண்பனுக்கு காய்ச்சல் வந்தது.
இரு நாட்கள் ஆகியும் குறையவில்லை.என் நண்பர்கள் அனைவருக்கும் அச்சமாக இருந்தது .இரண்டு நாட்களுக்கு பிறகும்
காய்ச்சல் குறையாததால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.நண்பன் பயத்துடன் இசைந்தான்.இரண்டு நாட்களுக்கு பிறகு அவனுக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது.அதை கேட்ட பிறகு எல்லோரும் மகிழ்ந்தனர்.
அன்று முதல் எல்லோரும் சரியாக முகக்கவசம் அணிந்தனர்.சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். இன்னும் ஆறு மாதங்களுக்கு கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் கொரோனாவை வென்று விடலாம்.
