ஊரடங்கு வாழ்க்கை பாடம்....
ஊரடங்கு வாழ்க்கை பாடம்....


ஊரடங்கு வாழ்க்கை பாடமா......
அது என்னமோ
உண்மை தான்....
பசியின் கோர தாண்டவம் .....
நெடு நாட்களாக பாதை யாத்திரை .....
உயிரை கொன்று
இன்பம் கொள்ளும்
கொடிய கிருமின் ருத்ரதாண்டவம்....
இன்னும் பல.....
நூறு நாட்களுக்கு மேலும்
தொடங்குற ஊரடங்கு
அதனால்,
பாமர மக்களின் பசியின் கோர தாண்டவம்....
ஆகையால்,
சொந்த ஊர்க்கு சென்றாவது வாழலாமுனு நினைச்சி கிளம்பனா
அதுவும்
பாதை யாத்திரையா.... செல்ல
நடந்த களைப்பில் உணவு உண்ண ஒரு இடத்தில்
அமர,
அதுவேர தண்டவாளமா போச்சு
இரயிலுக்கு சொந்த இடமா...
அதனால மேல ஏறி விளையாட்டிருச்சு...
இது ஒரு புறம் இருக்க...
தூரத்தில் இருந்து ஒரு கார்
வருகிறது....
அதை பார்த்த ஒரு சிறுவன்
தன் ஈன்றவனிடம் கூற...
அவரோ உன் பசியை போக்க
வருகிறதுஎன்றார் ......ஆனால்
வந்தது ஊடகங்கள்...
அவர்கள் டிஆர்பி பசியை
போக்க வந்து
இருக்கார்கள் ...
பேட்டி எடுத்து விட்டு
ஃஸ்டே ஹோம் ஃஸ்டே ஷேப் னு
டாட்டா சொல்லிட்டு
போயிட்டாங்க....
சுயநலத்தின் உச்சம்.....
அதோடு
செல்வந்தன் ஊரடங்களால்
ஏற்பட்ட உடல்
எடையை குறைக்க
உடற்பயிற்சி செய்கிறான்.....
நடுத்தர வர்க்கம்,
இருக்கறதை வைத்து சிறப்புடன்
இருக்கிறான்...
ஆனால்,
உண்ண உணவு இல்லை
பஞ்சம் பிழைக்க பரதேசம் வந்தவன்
உயிர் வாழ சொந்த ஊரை சேர
மேற்கொண்ட பயணம்
அதனால் ஏற்பட்ட
விளைவு.....
இப்படி ஒரு போக...
கனவு கோட்டை சிதைவு...
தெண்டமாக படிச்சியிட்டு
வேலைக்கு போகாமா இருக்கனு
பெத்தவங்களின் பேச்சால்...
உருப்படலானு நினைக்கும்
போது தான் இப்படியா
பட்டதாரிகளின் கவலை....
ஊரடங்கு சிறையால்
மன உளைச்சல்.....
பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்தவர்கள் ....
எதிர்பார்ப்பு
இயல்பு வாழ்க்கை
எப்போ திரும்பு.....இன்றோ நாளையே என்ற
கேள்வியுடன்
எதிர்பார்ப்பை
எதிர்பார்த்து கொண்டு.......
நான் கண்டது......