தித்திக்கும் திருவிழா
தித்திக்கும் திருவிழா

1 min

103
தித்திக்கும் சுவைகள்
ஏனோ திருவிழா அன்று
தீராத ஆசை ஆகிவிடுகிறது.
பல் இல்லா நோயாளி ஆனாலும்
பேரப்பிள்ளைகள் தரும் ஆசை அமுது,
உறவோடு உரையாடும்
அந்த உறங்கா நேரம்,
பக்கத்து வீட்டு பகிர்வுகள்,
குறைகள் அந்த கூரையில் இருந்தாலும்
கூடும் உறவுகூட்டத்தால்
நிறைவான குதூகலம் தான்.
தித்திக்கும் சுவைகூட
இந்த திகட்டும் தேனின்பதால்
தித்திப்பு இல்லாமல் போகிறது.