தாய்மை காப்போம்
தாய்மை காப்போம்

1 min

12
ஆழி சூழ்ந்த உலகிலே
ஆட்சி மொழியாய் நீ அமர
அர்பணிப்போம் எங்கள் ஆரூரையும்
அனாதைக்கும் கூட அடைக்கலாம்
உன் அடையாளம்
இப்பொழுது,
அடையாளம் தொலைத்து
அடிமைக்கு ஆளாகிவிட்டோம்
பல மொழி ஆசையால்
பண்பட்ட மொழியை பதுக்கிவிட்டோம்
பார்வை அற்று திரிகிறோம்
நம் மொழியை குருடாக்கியதால்
கருணை கொண்டு கற்பக தருவை காப்போம்
காலம் கண்டு கழிக்கூற
தாய்மொழியின் தாய்மை காப்போம்.