புதிய வேடந்தாங்கல்.
புதிய வேடந்தாங்கல்.
1 min
314
எத்திசைகளில் இருந்து
சிறகடித்து வந்து
இங்கு சிரிக்கும் முத்துக்கள்
இருபாலரும் சமம்
என்பதை காட்டும்
சிகர சிட்டுகள்
கலையுடன் சேர்த்து
கல்வியை செதுக்கும்
அழகிய அலகுகள்
ஐந்து வருட தவம் கொண்டு
புதிய பாரை படைக்க
வரம் தரும் இந்த மருத்துவ கல்லூரியும்
ஒரு வேடந்தாங்கல் தானே...
