STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Others

4  

Amirthavarshini Ravikumar

Others

மடமையைக் கொளுத்துவோம்

மடமையைக் கொளுத்துவோம்

1 min
328


கலவிக்காக காதல் செய்யும் 

மடமையைக் கொளுத்துவோம்

மோகத்திற்காக மோசம் செய்யும் 

மனிதரை கொளுத்துவோம் 

கருநிறத்தால் கலங்கும் 

மடமையைக் கொளுத்துவோம்

கருமையை குப்பையாக்குபவரின் 

கருவிழியை கொளுத்துவோம் 

அடுப்பங்கரையை ஆட்சிசெய்யும் 

மடமையைக் கொளுத்துவோம்

அங்கு அடிமையாக்கும் 

ஆண்மையை கொளுத்துவோம் 

பசிக்கு பிச்சை எடுக்கும் 

மடமையைக் கொளுத்துவோம்

சிறுதொழிலுக்கும் சிந்திக்கும் சோம்பலை கொளுத்துவோம் 

ஜாதியுடைய ஜனங்களின்

மடமையைக் கொளுத்துவோம்

ஜனநாயகத்தின் சர்ச்சைகளை கொளுத்துவோம் 

தன்னை தட்டி புதைக்கும் 

மடமையைக் கொளுத்துவோம்

இழிவு செய்யும் இம்சைகளை கொளுத்துவோம் 

வியந்து விழிக்கும் 

மடமையைக் கொளுத்துவோம்

கழுத்தை கடிக்கும் கயிற்றை கொளுத்துவோம் 

பச்சோந்தியாய் பிழைக்கும்

மடமையை கொளுத்துவோம் 

பணத்தை புசிக்கும் பூதங்களை கொளுத்துவோம் 

அரசியல் அரக்கனின் மடமையைக் கொளுத்துவோம்

ஓட்டுக்கான கையூட்டை கொளுத்துவோம் 

பேராசை பேயின் 

மடமையைக் கொளுத்துவோம்

பேரண்டத்தில் பரவிய பொறாமையை கொளுத்துவோம் 

பெற்றோரை அவமதிக்கும் மடமையைக் கொளுத்துவோம்

முதியோர் விடுதியில் விண்ணப்பிக்கும் விரலை கொளுத்துவோம்

கலி காலத்தின் மடமையைக் கொளுத்துவோம் 

உயிர் கொண்ட உலகை 

உயர்த்துவோம் வாரீர்.


Rate this content
Log in