மனிதர்கள் மூர்க்கத்தனமானவர்கள்
மனிதர்கள் மூர்க்கத்தனமானவர்கள்


நெருங்கி வரும் போதுயெல்லாம் பயம் .... தூரத்தில் இருந்து
ரசிக்கவே விரும்புவேன் .....
மயில் தோகையை விரித்து ஆடுவது
போல்
அதனுடைய காதுகள் இரண்டு
அசைவதை கண்டு ரசிக்கிறேன் ....
அதனுடைய வெண்ணிற கோட்டு
மெய் சிலிர்க்க வைக்கும்...
தூண் போன்ற கால்கள்.... நடந்து வரும் அசைவை கண்டு ஆனந்தம் பெறுவேன்...
ஆனால்...
நீ நம்பிக்கை என்ற வஞ்சத்தால்
வஞ்சிக்கப்பட்டாய் ....
அதை கண்டு அஞ்சினேன்....
மனிதாபிமானம் சிதைந்ததை கண்டு
....
பசியோடு வந்த உனக்கு பழத்தால் உன் பசியை போக்கமால்
அவர்கள் மூர்க்கத்தனமான பசிக்கு உன்னையும் உன் பிள்ளையையும் பழியாக்கிவிட்டன..
இனி நீ யாரை நம்புவாய்?
மனிதவுலகத்தை விட என்னுலகமே
மேல் என்று எண்ணுவாய்....
இவர்கள் என்னிடத்தில் இருந்துக்கொண்டு என்னையே
வஞ்சிக்கும்
கயவர் கூட்டம் ....
இவ்வுலகம்,
மனிதன் மூர்க்கத்தனமான நடந்தால்
மிருகம் என்பார்....
ஆனால் இங்கு
யார் மிருகம்?