இனிய தருணம் இளமை தருணம்.
இனிய தருணம் இளமை தருணம்.
1 min
242
சறுக்குகளை சகித்து கொண்டு
சிறப்புகளை சித்திரம் செய்து
பெற்றோருக்கு பெருமை சேர்க்க
சிட்டாய் சிறகடிக்கும் பல தருணம்
மூத்தாத இளசிரிப்புடன்
தன் வண்ணங்களுடன்
தேனை ருசிக்க சுற்றும்
வண்ணத்துப்பூச்சிகளய்
சில தருணம்
இப்படி தவிக்க வைத்து,
தயங்க வைத்து,
துள்ளி எழவைத்து,
வாழ்வின் வர்ணத்தை
ஒரே தருணத்தில்
காட்டும் இந்த இளமையை
இனிய தருணம் என்று சொல்வதா அல்லது
நம்மை இயற்றும் தருணம் என்று சொல்வதா?
