STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Others

4  

Amirthavarshini Ravikumar

Others

இனிக்கும் இயற்கையே...

இனிக்கும் இயற்கையே...

1 min
154

வயல் வாசம் விந்தையை வீழ்த்த 

இரவுக்கு நிலவுடன் என்ன ரகசியமோ? 

தென்றல் தீண்டி சாயும் இலையின் மயக்கம் 

கல்லோடு மோத துளிக்கு வருமோ தயக்கம்? 

 பகலவனுக்கு குடை விரிக்கும் வானம்

மேகத்தை மிதக்க விடுவது நியாயமா? 

இயற்கையை அழைக்கும் மனதே

உனக்கு பட்சியின் குரல் ராகமே!

கட்டி இழுக்கும் உன் கரம் 

எனக்கான தவமற்ற வரமே !


Rate this content
Log in