இனி ஒரு விதி செய்வோம்
இனி ஒரு விதி செய்வோம்
1 min
635
சமத்துவம் சகம் ஆழ
சத்திய விதி செய்வோம்
தாழ்வுகள் தளர்ந்து போக
தன்னலமற்ற விதி செய்வோம்
நிலமடந்தை நீண்டு ஜொலிக்க
பசுமை விதி செய்வோம்
கபடமற்ற கல்வி கற்க
அறிவு விதி செய்வோம்
பிறர்மனை நோக்கா
பண்பு விதி செய்வோம்
உடன்பிறந்தோர் உணர்ந்து
ஒழுக்க விதி செய்வோம்
பஞ்சம் தீர்ந்து பசி அடங்க
பயிர் விதி செய்வோம்
ஊன் கொடுக்கும் உயிருக்கு
உண்மை விதி செய்வோம்
தர்மம் தழைத்து அதர்மம் தாழிட்டு
திசை எங்கும் விதி செய்வோம்
இன்னல் இன்றி இன்புற
இனி ஒரு விதி செய்வோம்.
