என்னுள் பயணித்த நினைவுகள்
என்னுள் பயணித்த நினைவுகள்
எதற்காக இந்த அவசரம் சொல்வாயாக...
யாரு இட்ட கட்டளை
இது,
சொல்லுங்க?
தம்முடைய முடிவில் விதியா?
இல்லை,
விதியின் முடிவில் தாமா?
இதையும் நான்
கேளா.....
என்னுள் எழும் வினா இதுவவே ....
நினைவில்லை...
நினைவுக்கானது நினைவு இல்லையா....
இல்லை,
நினைவுக்கு வேண்டாதது
நினைவில் உள்ளதா...
என்ற குழப்பம் மனதினுள்
ஏற்பட....
அதை பின்னோக்கி
வருகிறது...
என்னுள் ஏற்பட்ட தோன்றலின்
எண்ணங்கள் இதுவே....
நினைவில்லை,
என்னை ஈன்றவள்,
வாடி மகளே!
என்று கூப்பிட்டது நினைவில் இல்லை...
அதையும் தாண்டி நினைவில்
உள்ளது
தாம் என் மீது காட்டிய
வெறுப்பு மட்டுமே....
என்னை கட்டி வாரி அனைத்தது
கொஞ்சியதும் நினைவில் இல்லை.
இருப்பினும்,
நினைவு கூறியது என்னை
விலக்கியே வைத்தது...
உன் கரத்தால் அமுதம்
ஊட்டியதும்
நினைவில் இல்லை
எந்தன் அதிசயமே...
ஆனால்,
நான் சிந்திய உணவை
அப்படியே எடுத்து
உண்ணுவாயாக என்றளித்த
தண்டனை நினைவில் உள்ளது.......
உன் மடியில் தலை வைத்து
உறங்கியதும்
என் நினைவில் இல்லை
என் உயிரின் உருவே..
இதையும் தாண்டி
என்னுள் உறைந்து இருக்கும்
நினைவானது இதுவே....
உன்னிடம் பரிசாக பெற்ற
அடியின் தழும்புகள் மட்டுமே
என்னுடன் பயணிக்கிறது.....
இதன் அர்த்தம் யாது?
அதையும் நான்
அறியேன் ...?