என் உடன்பிறப்பே...
என் உடன்பிறப்பே...
1 min
267
நாட்கள் திங்கள் மட்டுமா வேறு
குணங்களும் வேறு தான்.
எங்களது கூத்து தான்
எங்கள் கூரையின் குதூகலம்.
குறும்பால் எரிச்சல் ஊட்டி
புன்னகையால் காயம் ஆற்றுவார்கள்
சிறியவராக இருந்தாலும்
சிலநேரம் பெரியவர்தான்.
அதிக அதிகாரம் செய்தாலும்
அன்பின் அளவு குறையவில்லை
முதல் உரிமை அவர்களுக்கு இருந்தாலும்
அது தானாக எங்களுக்கு வந்துவிடும்.
இன்பம் பொழியும் வானொலியானாலும்
சண்டைகளால் சில நேரம் சலசலப்பு தான்
சலசலப்பால் சிறிது சரிகினாலும்
ஒருவரை ஒருவர் விடுதரமாட்டோம்.
