சுதந்திரம் ஆனதே
சுதந்திரம் ஆனதே
1 min
71
கள்வனின் கல்நெஞ்சம் சுதந்திரம் ஆனதே
குறுநகை மடிந்து போனதே
பயத்தின் பாதை சுதந்திரம் ஆனதே
பாதுகாப்பான புதர்கள் மடிந்து போனதே
மர்மங்கள் சுதந்திரம் ஆனதே
மனங்கள் மடிந்து போனதே
ஆக்கிரமிப்பு சுதந்திரம் ஆனதே
அரவணைப்பு மடிந்து போனதே
கதறல்கள் சுதந்திரம் ஆனதே
காக்கும் கைகள் மடிந்து போனதே
கொடிக்கம்பம் சுதந்திரம் ஆனதே
கொஞ்சும் எழில் மடிந்து போனதே
இந்தியா சுதந்திரம் ஆனதே
இந்திய மண் மடிந்து போனதே.
