STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Others

4  

Amirthavarshini Ravikumar

Others

அநாதையின் கடிதம்

அநாதையின் கடிதம்

1 min
261


ஜாதி இல்லா மனித ஜாதி 

அன்பிற்காக ஆதரவற்றவராய் 

அடைக்கலம் அளிப்பவரை அன்னையாக ஏற்று 

அரவணைப்பில்லா அநாதை நாங்கள் 



குப்பை தொட்டியில் சிலரது பிறப்பு 

குப்பையில் சிலரது வாழ்வு 

காப்பகத்தில் யாரும் காணா வாழ்வு 

காயத்தால் விழிமூடும் எங்கள் கனவு


சமூகத்தில் பிறப்பு அறியா பிள்ளைகள் 

சிலரின் சிந்தனையில் தீண்ட தகாதவர்கள் 

சிலருக்கு வியாபார பொருட்கள் 

சிலருக்கு விளையாட்டாய் நாங்கள் 



ஒருவரது புண்ணியத்தால் 

எங்களில் ஒருவருக்கு நல்வாழ்வு 

முன்ஜென்ம பாவத்தால் 

சிலருக்கு பாரமான வாழ்வு 

பொய்யான உலகில் தனித்து நிற்கும் 

எங்கள் வாழ்வு வரமா? 

பொன்னான கைகள் கோர்த்து 

தோள் சாய இல்லா 

இந்த வாழ்வு சாபமா? 



உணவு உடை உறைவிடம் மட்டும் தான் இல்லை 

இருந்தாலும் நாங்களும் மனிதர்களே 

எங்களுக்கு உயிருடன் கலந்த உணர்வும் உண்டு

தன்னம்பிக்கையுடன் தன்மானமும் உண்டு.


Rate this content
Log in