ஆணின் இரக்கம்
ஆணின் இரக்கம்
பிள்ளையின் பிடிவாதத்தில் பாசத்தின் இரக்கம்
புதிதாய் பூக்கையில் பாதுகாப்பின் இரக்கம்
காதலின் மழையில் காவலின் இரக்கம்
பெண்களின் பேறு காலத்தில் பேரன்பின் இரக்கம்
வியர்வை துளிர்விடுகையில் வான்துளியாய் உன் இரக்கம்
விம்மி அழுகையில் விடியலாய் உன் இரக்கம்
வயிறு காய்கையில் உன் பையின் இரக்கம்
வியாதியின் வசத்தில் உன் சேவையின் இரக்கம்
பெண்மையில் உன் ஆண்மையின் இரக்கம்
பிள்ளைகளிடம் பிதாவாய் உன் இரக்கம்
பெற்றோரிடம் கடமை என உன் இரக்கம்
தோழமையில் தோள் கொடுக்கும் உன் இரக்கம்
அகிலத்தின் ஆட்சியில் ஒரு பக்கம் ஆணின் அன்பென்னும் இரக்கம்
அனைவர் அகத்தின் ஒரு பக்கம்
ஆணின் அணைப்பென்னும் இரக்கம்.
