Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Children Stories Children

4.0  

Harini Ganga Ashok

Children Stories Children

அலிஸ்

அலிஸ்

2 mins
228


அலிஸ் இன் ஒண்டர்லாண்ட் மிகவும் பிரபலமான நாவல். திரைப்படமாகவும் வெளியாகி அனைவர் மனதிலும் இடம் பிடித்து இருந்தாள் நம் அலிஸ்.


19 வயது நிரம்பிய அலிஸை நம் உலகிற்குள் கொண்டு வந்தாலும் என்ன?? முயற்சி செய்வதில் தவறொன்றும் இல்லையே...


அன்று அலிஸ் கண்விழித்த பொழுது தாம் புது இடத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டாள். எப்படி இங்கே வந்தோம் இது என்ன இடம் எப்படி இங்கே இருந்து செல்வது என்று யோசித்து கொண்டிருந்தாள். அவள் யோசனையை கலைத்தது சைக்கிளின் பெல் சத்தம். திரும்பி பார்த்தாள். பால்காரன் என்று தெரிந்து கொண்டாள் அவனை பின்தொடர்ந்து சென்றாள் அவன் வீடுகளில் பால் ஊற்றும் பொழுது அளவு குறைத்து ஊத்துவது போல் தோன்றிற்று அவளுக்கு அதை கேக்கவும் செய்தாள். ஆனால் அந்த பால்காரன் மறுத்துவிட்டான். பால் வாங்கும் பெண்மணியோ கொஞ்சம் தானே குறைந்து விட்டது அதனால் என்ன இவன் மட்டும் வராமல் போனால் நான் காலைலேயே கடைக்கு நடந்து சென்று வாங்கி வர வேண்டும் என்று சலித்து கொண்டு சென்றுவிட்டாள்.


அலிஸ்க்கு நடப்பவை எல்லாம் விசித்திரமாக தோன்றியது. அவளால் அந்த பெண்மணியின் கூற்றை ஏற்க முடியவில்லை. தினமும் காலையில் வீட்டிற்கு வந்து பால் ஊற்றி செல்வதற்கான தொகையை சரியாக கொடுத்து விடுகிறார் அதேபோல் அந்த பால்காரனும் இருக்க வேண்டும் அல்லவா அவனின் நடவடிக்கைகள் தவறாக இருந்தாலும் அதனை கேள்வி எழுப்ப வேண்டாமா என்று எண்ணினாள். எண்ணியதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்மணிக்கும் அதனை கூறி கொண்டிருந்தாள்.


அவள் கூறுவது சரியாகவே பட்டது அந்த பெண்மணிக்கு இத்தனை நாட்கள் தாம் தவறு செய்துள்ளோம் என்பதை உணர்ந்துகொண்டாள். இனிமேல் இதுபோல் எங்கு தவறு நடந்தாலும் தட்டி கேட்க வேண்டும் என்றும் உறுதி கொண்டார். தனக்கு இந்த நன்னிலையை வழங்கிய அலிஸ்க்கு நன்றி தெரிவித்தாள்.


அலிஸ் அதற்கு அடுத்த நாள் கண்விழித்த பொழுது வேறொரு உலகில் இருந்தாள். இன்றும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று புறப்பட்டாள்.


அன்றாட வாழ்வில் நம் கண்முன் எத்தனையோ அநியாயங்கள் நடக்கின்றன பெரும்பாலும் நாம் அனைவரும் அதிலிருந்து ஒதுங்கியே இருப்போம் அதை தட்டி கேக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது. இன்று நாம் வாழும் வாழ்க்கை எத்தனையோ போராட்டங்களுக்கு பின் கிடைத்தது என்று நாம் அனைவரும் அறிவோம்.

மக்களாகிய நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை சமூகத்தில் நடைபெறும் சிறு தவறுகளையாவது தட்டி கேக்க வேண்டும்.


சமூகம் என்பதும் நம் குடும்பம் தான். நாம் அனைவரும் குடும்ப நலனை எதிர்பார்ப்பவர்களே. நம் அனைவர்க்கும் இங்கே உரிமை உள்ளது. நம் உரிமையை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது.


Rate this content
Log in