Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Harini Ganga Ashok

Children Stories Fantasy Children

4.3  

Harini Ganga Ashok

Children Stories Fantasy Children

ஜாது பிகே

ஜாது பிகே

2 mins
211


ஜாது மற்றும் பிகே இருவரும் சகோதரர்கள். ஜாது தான் பெரியவன். தாய் தந்தையர் உடன் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னால் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது அங்கு நடந்த கலவரத்தில் பிரிந்தவர்கள் தான். அதன்பிறகு எந்த விவரமும் இவர்களுக்கு தெரியவில்லை. ஜாது தன் தம்பியை நன்றாக கவனித்துக்கொள்வான். இருவரும் துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்தனர்.


அன்று கடையில் இருந்து பிகே மாயமானான். தம்பியை காணாமல் ஜாது மிகவும் தவித்து போனான். ஒன்பது வயது சிறுவனுக்கு என்ன தெரியும் என்று கவலைப்பட்டான் அவனின் பனிரெண்டு வயது அண்ணன். வேலைக்கு ஒருபுறம் சென்று கொண்டிருந்தாலும் தம்பியை தேடுவதை நிறுத்தவில்லை. வருடங்கள் உருண்டோடியதே தவிர தம்பியை கண்டபாடில்லை.


ஜாது 25 வயது இளைஞன் அப்போது. சொந்தமாக துணிக்கடை ஒன்று நடத்தி வந்தான். அன்று துணிக்கடைக்கு ஒரு தம்பியதியர் வந்திருந்தனர் அவர்களின் மகனுடன். ஜாது அதிர்ச்சிக்குள்ளான். வந்திருப்பதோ அவனின் அப்பா அம்மா. இத்தனை வருடம் கழித்து சந்தித்தாலும் அவனுள் மகிழ்ச்சி எழவில்லை காரணம் அவர்களுடன் இருந்த மகன். நானும் என் தம்பியும் தொலைந்து போனதை பற்றி கவலைகொள்ளாமல் இவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான்.


அவனின் சிந்தனைகளை களைத்தது அந்த குரல். அந்த இளைஞன் ஜாதுவிடம் பேச முற்பட்டான். அவனை ஜாது முறைத்து பார்த்தான். எதிரில் இருப்பவனோ கண்டுகொள்ளவில்லை. "எப்படி இருக்கீங்க அண்ணா? "என்றான் அந்த புதியவன். ஜாதுவிற்கு எதுவும் விளங்கவில்லை. அவனை புரியாத பார்வை பார்த்துவைத்தான். அந்த புதியவன் மீண்டும் தொடர்ந்தான்.


அங்கே நின்று கொண்டிருந்த தம்பதியினரை சுட்டிக்காட்டி பேச ஆரம்பித்தான். "அங்க நிக்கிறாங்களே அவங்களுக்கு ரெண்டு பசங்க பாவம் சின்ன வயசுலயே அவங்கள தொலைச்சிட்டாங்க. பசங்கள்ல மூத்தவன் தான் சின்னவன பாத்துக்கிட்டான். அப்பா அம்மாவ விட அந்த பையன் அவனோட தம்பிய நல்லா பாத்துக்குவான். திடிர்னு ஒரு நாள் சின்னவன் தெருல ஒரு அம்மா பொலம்புறத கேட்டான். அவனுக்கு இதயம் நின்னு துடிச்சுச்சு. ஏன்னா அது அவங்க அம்மா.


பிள்ளைங்களை தொலச்சத்துல இருந்து ஒவ்வொரு இடமா தேடி அலைஞ்சு மனசளவுல ரொம்ப தளர்ந்துட்டாங்க. அப்பாவால பிசினஸ் சரியா நடத்தமுடியாம அதுலயும் நஷ்டம். வாழ்க்கை வெறுத்துருச்சு அவங்களுக்கு. சாப்பிடறதுகூட வழி இல்லாம இருந்தாங்க. அவங்களுக்காக இன்னும் உழைக்கணும்ன்னு நெனச்சு அண்ணன விட்டு தனியா போய் கெடைக்கிற வேலை எல்லாம் செஞ்சு அவங்கள நல்லா பாத்துக்க ஆரம்பிச்சான். ரெண்டு பேருக்கும் மனநிலை பாதிக்க பட்டனால அவங்களுக்கு அவங்க பையனே தெரியல.


கொஞ்சம் கொஞ்சமா டிரீட்மென்ட் பாத்து சரி ஆகி வரும்போது பையன் பெரியவனாகிட்டான் அடையாளம் தெரில. இன்னைக்கு தான் அவங்களுக்கு அவங்க சின்ன பையன் திரும்ப கெடச்சுருக்கான். இப்போ அவங்களோட பெரிய பையன தேடி வந்துருக்காங்க." என்று நிறுத்தினான்.


கண்களில் நீருடன் தன் சகோதரனை அணைத்துக்கொண்டான். அம்மாவும் அப்பாவும் மனம் உருகி நின்றனர். நால்வரும் ஒன்றிணைந்தனர். அனைவர் மனதிலும் ஒரு பிரார்த்தனை இருந்தது. இனிமேல் பிரிவு என்பது கூடாதென்று.


Rate this content
Log in