Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Children Stories Fantasy Children

4  

Harini Ganga Ashok

Children Stories Fantasy Children

மகிழ்மதி

மகிழ்மதி

2 mins
314


மகிழ்மதி கற்பனையில் உருவான ராஜ்யமாக இருந்தாலும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அமரேந்திர பாகுபலி, சிவகாமி தேவி, கட்டப்பா போன்ற கதாபாத்திரங்கள் நம் கண்முன்னே நிஜம் போல் நிழலாடுகின்றன.


ஸ்னோவ் வைட் குழந்தைகள் விரும்பும் விசித்திர கதைகளில் (fairy tales) வரும் தேவதை கதாபாத்திரம்.

நாம் இன்று ஸ்னோவ் வைட்டை மகிழ்மதி ராஜ்யத்திற்குள் அழைத்து வருவோம்.


அன்றொரு நாள் புல்வெளியில் ஸ்னோவ் வைட் தன் செல்ல நாய்குட்டியுடன் விளையாடி கொண்டிருந்தாள். அது அவளின் பாதுகாப்பிற்காக அவள் தாய் கொடுத்தது. அவளையே எப்போதும் சுற்றி வரும். திடீரென்று டினோ ஓட ஆரம்பித்து விட்டது. ஸ்னோவ் வைட்க்கு என்னவென்று தெரியாத போதிலும் அதன் பின் ஓடிக்கொண்டிருந்தாள். வெகு நேரம் கழித்தே தான் அரண்மனையில் இருந்து மிகவும் தூரமாக வந்துவிட்டதை உணர்ந்தாள். ஆனால் அவளின் டினோ நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அது நின்ற இடமோ மகிழ்மதியில்.


அவ்வரண்மனையின் அமைப்பு கண்டு ஆச்சரியப்பட்டுப்போனாள் ஸ்னோவ் வைட். இவளை கண்ட காவலர்கள் டினோ மற்றும் வைட்டை சிவகாமி தேவியிடம் அழைத்து சென்றனர். அனைத்தும் விசித்திரமாக தோன்றியது இருவருக்குமே. சில நேரம் ஆச்சரியத்தில் இருவருக்கும் வார்த்தை வராமல் போனது. சிவகாமி தேவி தான் முதலில் அவளை பற்றி விசாரித்தார். அவள் தன்னை பற்றியும் டினோ பற்றியும் அறிமுகம் செய்து கொண்டாள். அவளுக்கு அந்த சூழல் மிகவும் பிடித்துவிட்டது. அனைவரிடமும் ஒட்டிக்கொண்டாள். அங்கேயே தங்க தொடங்கினாள்.


அன்றொருநாள் அரசவையில் மக்கள் அழுதுகொண்டிருந்தனர். சிவகாமி தேவியும் அமரேந்திர பாகுபாலியும் ஆறுதல் கூறி பழைய நிலை திரும்பும் என்று வாக்களித்து கொண்டிருந்தனர். வைட் இதனை பற்றி கட்டப்பாவிடம் கேட்டாள். அவர் நாட்டில் மழைபெய்து வெகுநாட்கள் ஆகிவிட்டது எங்கு பார்த்தாலும் பசி பட்டினி என்னும் நிலை உள்ளது. மகிழ்ச்சி என்பதே மகிழ்மதி மக்களிடம் இல்லாமல் போய்விட்டது என்று வருத்தத்துடன் கூறினார்.


இதை எப்படியாவது சரி செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணி அவளின் தாய் அவளுக்கு கற்பித்து கொடுத்த மந்திரங்கள் உச்சரித்து அவர்களின் காலபைரவரை வழிபட்டு மகிழ்மதி மண்ணில் மழை பொழிய வைத்தாள். அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவளுக்கு நன்றிகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினர். வைட் டினோவிடம் இதற்கு தான் நீ இங்கு வரை ஓடி வந்தாயா என்று கேட்டதற்கு ஆம் என்று மண்டையை ஆட்டியது.


பிறரின் மகிழ்ச்சிக்கு காரணமாக நம்மால் எப்பொழுதும் இருக்கவியலாது ஆனால் முடிந்தவரை நம்மை சுற்றி நமக்காக இருப்போரை சந்தோஷமாக வைத்துக்கொள்வோம். யாருடைய கண்ணீருக்கும் காரணமாகி விடாதீர்கள். உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.


Rate this content
Log in