Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Children Stories Fantasy Children

4.7  

Harini Ganga Ashok

Children Stories Fantasy Children

விக்ரமும் வேதாளமும்

விக்ரமும் வேதாளமும்

2 mins
278


விக்ரமாதித்யன் வேதாளம் பற்றி அறியாதோர் யாரும் இல்லை. வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சு என்ற சொல்வழக்கை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். விக்ரமாதித்யனையும் வேதாளத்தையும் வேறொரு பரிமாணத்தில் காண்போம்....


அன்றொரு நாள் வேதாளம் விக்ரமாதித்யனை அழைத்துக்கொண்டு நகருக்குள் பிரவேசித்தது. விக்ரமன் அவனுடன் என்னடா இது ஆச்சரியமா இருக்கு வேதாளம் நடந்துலாம் வருது என்று கேட்டான். அதற்கு வேதாளம் கொஞ்சம் டயாபடீஸ் வந்துருச்சு பாஸ் அதான் எக்சர்சைஸ்காக இந்த வாக்கிங் என்றான். விக்ரமாதித்யன் அது என்னதுடா புதுசா சொல்ற எனக்கு வராம உனக்கு மட்டும் வந்துருக்கு என்றான்.


வேதாளம் கூற ஆரம்பித்தது. அது வந்து பாஸ் டயாபடீஸ் அப்படினா சுகர்ன்னு சொல்லுவாங்க சர்க்கரை வியாதி விக்ரமன் உடனே டேய்ய் சர்க்கரைக்கு தானே வியாதி அதனால உனக்கு என்ன வியாதி வந்த சர்க்கரையை சாப்டியா என்றான். வேதாளம் கடுப்புடன் நா சொல்றத முழுசா கேட்டா நடந்து வருவேன் இல்லனா நீங்க தான் தூக்கனும் பரவலயா என்றான். அதற்கு பின் விக்ரமின் வாய் மூடிக்கொண்டது.


நம்ம உடல்ல ரத்தத்தில க்ளுகோஸ் அதாவது சர்க்கரையோட அளவு கூடிச்சினா அது ஹைசுகர் கொறஞ்சா லோசுகர். கணையம் அப்படிங்கிற உறுப்பு இன்சுலின்கிற ஹோர்மோன்ன சுரக்க வைக்கும் அது சுரக்கிறது கொறைரனாலயும் அதோட வேலையை சரியா செய்யாட்டியும் இந்த வியாதி வருது. இதுக்கான அறிகுறிகள் வந்து அதிகமா வியர்க்கும் அதிகமா பசிக்கும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும் உடல் இடை கொறையும் பார்வை மங்கலா தெரியும். விக்ரம் உடனே கேக்கவே பயமா இருக்கு வந்தா போகாதா இது என்றான். வேதாளம் தொடர்ந்தான்.


பிரச்சனை என்று ஒன்று இருந்தால் தீர்வு ஒன்று இருக்க தானே வேணும் அது சாதகமோ பாதகமோ ஏத்துக்கிட்டு தா ஆகணும். இயற்கை மருந்துகள் நெறய இருக்கு உங்களுக்கு பாகற்காய்னாலே புடிக்காதுல ஆனால் இந்த வியாதி இருக்கிறவங்க பாகற்காய தெனமும் சாப்பாட்டுல சேத்துகிறது ரொம்ப நல்லது. இது போக நாம ஒதுக்கிறோமே கருவேப்பிலை அதுகூட நல்லது. வெந்தயம், ஆளிவிதை, துளசி, நாவல்பழம், கொய்யா பழம் இதெல்லாம் சர்க்கரைநோயை கட்டுப்படுத்தும்.


விக்ரமன் ஆச்சரியத்துடன் வேதாளத்தை பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டான் இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும் என்று என் தோஸ்து சொன்னான் பாஸ் என்றான். எப்பவும் நாம பிரச்னை வந்த அப்றம்தா அதுல இருந்து வெளிய வர பாப்போம் வரதுக்கு முன்னாடியே முன்னெச்சரிக்கையா நம்ம நம்மள பாத்துக்கிட்டா எந்த பிரச்சனையும் இல்லை. உடம்புக்கு சத்தான சாப்பாடை சாப்பிடுவோம் நம்ம உடம்ப நாம தானே பாத்தாகணும். என்ன பாஸ் நா சொல்றது சரி தானே. நீ சொல்லி எது தப்பா போயிருக்கு என்றான் விக்ரமன். இருவரும் புறப்பட்டனர்.


Rate this content
Log in