Arul Prakash

Others

3  

Arul Prakash

Others

பிரேக் அப்

பிரேக் அப்

4 mins
218


சானக்யா, ராம், விஷால் காலேஜ் ஒண்ணா படிச்சவங்க, 6 வருஷம் கழிச்சு ஒண்ணா சந்திக்குறாங்க. மூணு பேரும் ஒரு காபி ஷாப் ல சந்திக்குறாங்க.


ராம் to சானக்யா : என்ன டா, பொண்ணு எதுனா லவ் பண்ண கிடைச்சுதா, இல்ல இன்னும் மேயாத மானாவே இருக்கியா.

சானக்யா : எனக்கு ஏது டா பொண்ணு.


விஷால்: எப்படி டா ஆள் இல்லாம லாம் இருக்கீங்க. என்னால ஒரு நாள் கூட என் ஆள பாக்காம இருக்க முடியாது.

சானக்யா : டேய் என் கிட்ட பேசுறதக்கு உங்களக்கு வேற எந்த விஷயமே கிடைக்கலயா.

ram: டேய் கோப படுறான் டா.


விஷால் : ரொம்ப அவன கலாய்க்காத டா, virgin பசங்க சாபம் சும்மா விடாது.

இப்படியே ஒரு மணி நேரமா சானக்யாவ கலாய்க்கிறாங்க. சானக்யா கோபமா கிளம்பி போயிடுறான்.

சானக்யா, அவனோட ரூம்க்கு வரான்.


சானக்யா room mate to சானக்யா : என்ன டா, உன் காலேஜ் friends பாக்குறேன்னு போன, கோபமா வந்து இருக்க.

சானக்யா : இல்ல டா என் friends, என்னை லவ்வர் இல்லனு சொல்லி கலாய்ச்சிட்டாங்க.

room mate : என்ன டா friends, அவங்க, இதை எல்லாம் வச்சியா கலாய்பாங்க.

சானக்யா : மனசே கஷ்டமா இருக்கு, இவங்கள ஏன் பாத்தேன்னு நினைக்கிறன்.

room mate : விடு டா இதை, போய் தூங்கு, காலைல எல்லாம் சரி ஆகிடும்.

ரெண்டு நாள் ஆகியும் சானக்யா அதை நினைச்சி வருத்த பட்டுட்டு இருக்கான்.

ரெண்டு நாள் கழிச்சு.


சானக்யா room mate to சானக்யா : டேய் ரெண்டு நாளா சோகமா இருந்த, இப்ப சந்தோசமா தெரியற.

சானக்யா : என் friends , ராமும், விஷால் என்ன கலாய்ச்சிட்டாங்க, அவங்க லவ் ah பிரிச்சிடலாம்னு இருக்கேன்.

room mate : டேய் என்ன சொல்ற, நீ அவங்கள விட கேவலமா நடந்துகிற.

சானக்யா : போடா, இப்ப தான் ராமோட ஆள், வேறு ஒருத்தன் கூட வண்டில போறத பாத்தேன், அவளோ நெருக்கமா போய்ட்டு இருந்தா , அதை போட்டோவா எடுத்து வச்சி இருக்கேன். அந்த போட்டோவை வேற ஒரு நம்பர்ல இருந்து அனுப்ப போறேன். ராம் ரொம்ப possesive, கண்டிப்பா பிரேக் அப் தான்.

room mate: என்னமோ பண்ணு.


வேற ஒரு நம்பர்ல இருந்து போட்டோவை அனுப்பிட்டான் சானக்யா, ராமுக்கு.

இப்ப விஷலோட லவ், பிரிக்க பிளான் பன்றான் சானக்யா. facebook எடுத்து முதல விஷால் ஆள் யாருனு, அவன் friends list எடுத்து பாக்குறான். ஏதும் கண்டுபிடிக்க முடியல, உடனே அவன் காலேஜ் friend கிஷோர்க்கு கால் பண்றான்.

சானக்யா to கிஷோர் : டேய் கிஷோர் எப்படி இருக்க.

கிஷோர் : நல்லா இருக்கேன் மச்சி.

சானக்யா : டேய் விஷால் ஆள பாத்து இருக்க.

கிஷோர் : இல்ல மச்சி, ஆனா எனக்கு ஒரு டவுட்

சானக்யா : என்ன.

கிஷோர் : அவனுக்கு ஆளு இருக்கா இல்லையானு.

சானக்யா : ஏன் டா அப்படி சொல்ற

.

கிஷோர் : இது வரைக்கும், அவன் ஆள காட்டுனதே இல்ல. அதுவும் இல்லாம இப்பலாம் முக்காவாசி பேரு லவ் பன்றாங்க, அதுனால ஆளு இல்லனு சொல்றதக்கு கேவலப்பட்டுனு, நானும் லவ் பண்றேன் சொல்லிக்குறாங்க.

சானக்யா : ஆமா மச்சி, நானும் facebook friends லாம் கூட செக் பண்ணேன். பொண்ணுங்களே இல்ல மூணு ஆண்ட்டிங்க தான் இருக்கு, அதுவும் அவன் சொந்தக்காரங்க ஆன்ட்டிங்க. இந்த facebook இல்லாத பொண்ணுங்க ஏது.

கிஷோர் : அது தான் சொல்றேன்ல மச்சி, அவனுக்கு ஆளு லாம் இல்ல. சும்மா நாங்க living together nu கதை விடுறான்.

சானக்யா : அப்படியா சொல்ற.


கிஷோர் : அப்படி தான், அவனுக்கு ஆளு இல்லனு நிரூபிக்க, என் கிட்ட ஐடியா இருக்கு.

சானக்யா : என்ன ஐடியா.

கிஷோர் : நாளைக்கு விஷால் பிறந்த நாள், நாளைக்கு ஒரு கேக் வாங்கிட்டு, அவன் ரூம்க்கு போய் பர்த்டே விஷ் பண்ணு, அவன் living togetherல இருந்தா, அந்த பொண்ணு கூட இருக்கணும்ல.

சானக்யா : செம ஐடியா, நாளைக்கு போறேன்.

கிஷோர் : நானும் அவனுக்கு ஆள் இருக்கானு பாக்கணும்.

சானக்யா : சரி நீயும் கூட வா.


கிஷோர் : எனக்கு ஆபீஸ் லீவு போட முடியாது.நீ ஒன்னு பண்ணேன், சாதாரணமா பர்த்டே கேக் கட்டிங் லாம் facebook லைவ்ல காட்டுவங்க அது போல காட்டு, நான் ஆபீஸ்ல இருந்தே பாத்துக்குறேன்.

சானக்யா : அவனுக்கு ஆள் இல்லனு தெரியட்டும், செமயா கலாய்க்கிறோம்.


---------------அடுத்த நாள் -----------

சானக்யா கேக் ஒரு கையில வச்சிக்கிட்டு , விஷால் ரூம்ம தட்டுறான், யாரும் வரல. கதவு பூட்டாம இருக்குது, மெதுவா திறக்குறான். ஒரு கைல கேக் வச்சுக்கிட்டு, ஒரு கைல facebook லைவ் ஓபன் பண்ணி வச்சிக்கிட்டு. லைவ்ல கிஷோர் பாத்துட்டு இருக்கான். facebook லைவ் ஓபன் பண்ணி வச்சுட்டு, happy birthday னு கத்திட்டு வீட்டுக்குள்ள போறான், பார்த்த உடனே ஒரு ஷாக் ஆகி கேக் கீழ போடுறான், கிஷோர் லைவ்ல பாத்து ஷாக் ஆகுறான், என்னனா ரெண்டு ஆம்பளைங்க வாயோட வாய் வச்சு முத்தம் கொடுத்துட்டு இருக்காங்க. விஷால், சானக்யாவ பாத்துட்டு, ஷாக் ஆகுறான். சானக்யா facebook லைவ் ah கட் பன்றான்.

விஷால் to சானக்யா : வா டா, வந்து உட்காரு.

சானக்யா : டேய் நீ gay வா.

விஷால் : ஆமா மச்சி. நான் சொல்லணும்னு இருந்தேன், இப்ப தெரிஞ்சிடிச்சி.

சானக்யா : சரி விடு.

விஷால் : டேய் உனக்கு என்ன ஆளு கிடைச்சுதா இல்லையா.

சானக்யா : என்ன டா எப்ப பாத்தாலும் ஆளு ஆளுன்னு.

விஷால் : டேய் அன்னைக்கு காண்டு ஆகிட்டல, நாங்க கலாய்ச்சோம்னு. அது ஒன்னும் இல்ல, உன்ன எப்பவுமே, எதாவது பண்ண முடியலன்னு கலாய்ச்சா, உடனே நீ அத செஞ்சி காட்டுவ, உனக்கு ஆளு இல்லனு கலாய்ச்சா, உடனே ஒரு பொண்ணு லவ் பண்ணி வாழ்க்கைல செட்டில் ஆவன்னு, அப்படி பண்ணோம்.

சானக்யா : ஓ அதுக்கு தான் அப்படி பண்ணிங்களா. டேய் நான் ஒரு தப்பு பண்ணிட்டேன், நீங்க கிஸ் பண்ணது தெரியாம facebook லைவ்ல போட்டுட்டேன்.

விஷால் : அடப்பாவி.


சானக்யா : இரு எத்தனை பேரு பாத்து இருக்கானு பாக்குறேன்.

சானக்யா போன் ah எடுத்து செக் பண்ணி பாக்குறான்.

சானக்யா to விஷால் : டேய் நிறைய பேரு பாத்து இருக்காங்க, நம்ம காலேஜ் friends. எல்லாரும் உனக்கு வாழ்த்துக்கள் சொல்ராங்க டா.

விஷால் : தேங்க்ஸ் மச்சி. எப்படி என்ன இந்த சமுதாயம் ஏத்துக்கும்னு இருந்தேன். உன்னால எல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சு.

சானக்யாக்கு போன்ல மெசேஜ் வருது, எடுத்து பாத்தா, அவன் பிரண்ட் ராம்க்கு, அவன் ஆளு வேற ஒருத்தன் கூட இருக்க போட்டோ பாத்து, என் ஆளு பத்தி எனக்கு தெரியும் நீ வேலைய பாருன்னு மெசேஜ் அனுப்பி இருந்தான்.

அப்பறம் சானக்யா, ராம்க்கு போன் பண்ணி, நான் தான் அந்த போட்டோவை அனுப்பிச்சேன்னு சொல்லி மன்னிப்பு கேட்குறான்.



Rate this content
Log in