நீரை உவமை கொண்ட இயற்கையின் கேள்வி
நீரை உவமை கொண்ட இயற்கையின் கேள்வி
நீர் என்னும் தாய்
மேகம் என்னும் உருவெடுத்து
காற்று என்னும் ஊர்தியில்
கடந்து செல்லும் போது
மலை என்னும் முகட்டில் மோதி
மழையாக பொழிகிறாள் மீண்டும்
நீராக பிறக்கிறாள் - இவள்
மறுபிறவி உயிரினங்கள் வாழ்வின்
கருவி -இவள் பெருமை
உலகம் போற்றும் உண்மை
தன்மைகள் மாறியும் உருவங்கள் மாறியும் பாதைகள் மாறியும்
மாறவில்லை உயிரினை காக்கும்
கருவியானவள் தன் பணியிலிருந்து மாறவில்லை
மாறாத மாண்புடைய நீரினால்
வாழும் மனிதா நீ மட்டும்
ஏன் பிரிவினை தேடுகிறாய்?