ஈசனே சிவகாமி நேசனே
ஈசனே சிவகாமி நேசனே
1 min
252
ஈசனே சிவகாமி நேசனே
காலனை வெல்லவும் காளையில் வருவான்
காலமும் துதிக்க கர்மபலன் தருவான்
நினைந்தேன் உன்னை நித்தமும்
நினைக்க வருவான் நித்தம் ஈசனே
முக்கண் ணுடையவன் முடிவில் லாதவன்
இக்கண் போதுமோ இறைவனைக் காண
எப்பிற விவேண்டும் எனக்கும்
இப்பிற விபோதுமே இறைவா அருளவே
சிரசில் கங்கை சிவனின் லீலை
அரவம் கழுத்தில் அதுவே மாலை
உடலின் பாதியில் உமையவள்
அடங்கும் எல்லாம் அம்மான் நீயே
