அம்மா
அம்மா
1 min
315
உயிர் வாங்கி
உயிர் வளர்த்து
உயிராய் இருப்பவள்
அம்மா
நம்முள் உதிரம் சேர
தன் உதிரத்தைப் பாலாக்கி
ஊட்டுபவள் அம்மா
தனக்கு இல்லாவிடினும்
குழந்தைக்கு உணவூட்டி
தண்ணீர் குடித்து
பசியாற்றிக்கொள்வாள்
அம்மா
ஆபத்து நேரத்தில்
அம்மா என்றழைத்தாலே
ஓடோடிவந்து
காப்பவளே அம்மா
அம்மாவைவிட நாம்
உயரே வளர்ந்தாலும்
அன்பு,பாசம், நேசம்
உயர் குணங்களில்
அவளே எட்டமுடியாத உயரம்.
