STORYMIRROR

APSARKHAN PAGURUDEEN

Others

4  

APSARKHAN PAGURUDEEN

Others

விடுமுறையில் விண்வெளி

விடுமுறையில் விண்வெளி

1 min
440

விடுமுறையில் விண்வெளிக்கு விரைந்துபோக வேண்டும்,


விடுமுறை முடிவதற்குள் வீட்டிற்கு வந்துசேர வேண்டு்ம்,

 

என்ற என்னத்தில் நான் விண்வெளிக்கு சென்றேன், 


அங்கு நான் காணாத காட்சிகளை கண்களால் கண்டேன், 


சுவாசிக்க காறென்று அங்கு ஒன்றும் இல்லை,


மிதப்பதற்க்கு எல்லை என்று அங்கு ஒன்றும் இல்லை,


பார்ப்பதற்கு உயிரென்று அங்கு ஒன்றும் இல்லை,


உயிர்கள் தாங்கும் பூமிதான் வேறொன்றும் இல்லை,


பறப்பதற்கு பறவை என்று அங்கு ஒன்றும் இல்லை,


மனிதன் பறப்பதற்கு சிறகுகள் அங்கு தேவை இல்லை,


இருள் சூழ்ந்த அண்டத்திலே எரிகிறது ஞாயிறு,


அது எரிகின்ற வெளிச்சத்தில் மறைகிறது காரிருள்,


ஒளி ஆண்டு தூரத்தில் ஒளிர்கிறது நட்சத்திரம்,


உலகின்மேல் சுழல்கிறது மனிதனின் கற்பனைத்திறன், 


விண்கலம் விட்டு ,விண்வெளி தொட்டு,


வேற்றுகிரகம் இறங்க பார்த்தேன் 

என் அம்மா என் பெயர் சொல்லி கூப்பிட,


கனவில் இருந்து எழுந்தேன்.

                        - APSARKHAN PAGURUDEEN 

           



Rate this content
Log in