STORYMIRROR

தாமோதரன் சாது

Children Stories Tragedy Inspirational

3  

தாமோதரன் சாது

Children Stories Tragedy Inspirational

பாட்டி சொல்லைத் தட்டாதே

பாட்டி சொல்லைத் தட்டாதே

1 min
201

*பாட்டி அடிக்கடி சொல்லுவாள்*

நீரால் கோலம் போடாதேநெற்றியைக் காலியாய் விடாதேகுச்சியைக் கொளுத்தி வீசாதேஇரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதேகாலையில் அதிகம் தூங்காதேதொடையில் தாளம் போடாதேதரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதேநகத்தை நீட்டி வளர்க்காதேஆலயம் செல்லத் தவறாதேஅதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதேசந்தியில் நீயும் உண்ணாதேவிரிப்பைச் சுருட்ட மறக்காதேபகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதேஈரம் சொட்ட நிற்காதேநாமம் சொல்ல மறக்காதேநல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதேநின்று தண்ணீர் குடிக்காதேஎதையும் காலால் தட்டாதேஎச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரேஎந்தன் குடியில் மூத்தோரேஎல்லாம் கேட்டு வாழ்ந்தோரேஎன்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*


Rate this content
Log in