ஓ மனிதா
ஓ மனிதா
ஆதியும் அந்தமும் இல்லா பிரபஞ்சம்,
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் படைக்கப்பட்டது.
பிரபஞ்ங்கள் பல உள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அது ஒரு விஞ்ஞானிகலின் கருதுகோள் மட்டுமே .
மில்லியன் கணக்கான விண்மீன் திரள்கள் உள்ளன.
அதில் ஆயிரக்கணக்கான நட்சத்திரக்க குடும்பங்கள் .
நாங்கள் சூரிய குடும்பத்தில் ஒரு அங்கமாய் வாழ்கிறோம்.
அழகான பூமி அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர்.
பிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்கும் கிரகங்களில்
சிலவற்றில் நம் பூமியும் ஒன்று என்பது எம் அதிர்ஷ்டம் .
நம் பூமி பிரபஞ்சத்தில் ஒரு துளி கடல் நீர் போன்றது .
பிரபஞ்சத்தில் உள்ள தூரங்களைப் பற்றி ,
ஒளி ஆண்டுகளில் நீளத்துடன் ஒப்பிடுகிறோம்.
ஒளி அதன் வேகத்துடன் ஒரு வருடத்தில் ,
பயணிக்கும் தூரம் ஒளி ஆண்டு என்கிறோம் .
ஒரு வானியல் அலகையும் நாங்கள் வரையறுக்கிறோம்.
நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேலான தூரம்,
ஒரு வானியல் அலகு என்கிறோம் ,
இவை அனைத்தும் மனிதனால் வரையறுக்கப்பட்டவை .
கடவுள், எங்களை இங்கே ஒரு காரணத்திற்காக மட்டுமல்ல,
இயற்கையை மதித்து ஒற்றுமையாகவும் ,
அமைதியாகவும் வாழ வேண்டும். என படைத்தான் ,
இரு நா டுகளுக்கு இடையே போர் மேகங்கள்,
அதில் ஓன்று ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டது
உண்மை தெளிவாக உள்ளது,
உலகமே ஆக்கிரமிப்பை எதிர்க்கிறது .
மதில் மேல் பூனை போல சில நாடுகள் ,
நட்பை நிலை நாட்ட செயல் படுகின்றன் .
ஒரு சில நாடுகள் ஏன் உண்மையை ஏற்கவில்லை?
எல்லா மனிதர்களின் பரிணாம வளர்ச்சி ,
ஒரு உயிரணுவில் இருந்து தோன்றியது.
இன்றும் பல பரிணாமம் பற்றிய விவாதங்கள் உள்ளன.
மனித மூளை வளர்ச்சியடையும் போது
இயற்கையிலிருந்து பல கண்டுபிடிப்புகள் செய்யப்படுகின்றன.
ஒன்று திண்மம் சக்தி ஐன்ஸ்டீன் சமன்பாடு
அதுதான் அணுகுண்டை உருவாக்கியது.
இது ஜப்பானில் மில்லியன் கணக்கானவர்களை அழித்தது
சோவியத் ஒன்றியத்தில் இருக்கும்போது
உக்ரைனில் உள்ள செர்னோபில் பலரின் உயர்களை எடுத்தது .
நாடுகளின் தலைவர்கள் அறிவதில்லை அதன் விளைவுகளை.
மக்களின் துன்பங்களை பார்த்து ரசித்து வளர்ப்பது.
சோவியத் ஒன்றியத்தின் அகங்காரம்,
அவர்கள் இந்த பூமியில் வாழ வந்த போது
எதையும் கொண்டு வரவில்லை என்பதையும்,
இறக்கும் போது எதையும் கொண்டு போவதில்லை,
என்ற உண்மையை மறந்து விடுகிறார்கள்.
ஆனால் அவர்களின் எதிர்மறை செயல்கள்,
ஈகோ என்ற பைசா சின் மூலம் வளர்ந்தவை .
ஆனால் அவர்கள் குவிக்கும் செல்வமும் அதிகாரமும் அல்ல,
வாழ்க்கையில் எல்லா மனிதர்களையும் சமமாக மதிப்பதையே,
உங்களை படைத்தவன் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது .
ஓ மனிதா எபோது நீ இதை உணருவான்
