இயற்கை
இயற்கை
1 min
118
ஆகாயம்.....
மஞ்சள் தேய்த்து
குங்குமம் சூடிய வேளையில்
கிளம்பிவிட்டேன்.....
எனது நீண்ட பயணத்திற்கு!!!
என்னுள் நுழைந்து
உன்னில் கரைய
காதோரம் கதைக்கும் என் மூச்சுக்காற்று!!!
ஊசிமழை!!!
என் நெஞ்சைக் கிழிக்க.....
விலக்கவும் முடியவில்லைை வெறுக்கவும் முடியவில்லை.....
தலை துவட்டிய துவாய் உடன்
சன்னல் ஓரத்தில் முகம் சிரிக்க
கண்கள் பாராட்டுகிறது.....
சில துளி கண்ணீரை.....
வலி ஏந்திய விழிநீர்
சற்று சர்க்கரை ஆகிற்று!!!
கைகள் சுதந்திரம் கொண்டாட
விழிகள் வண்ணம்
பூசிக்கொண்டன.....
தொலைதூர இசையொலி!!!
வயிற்றுக்குள் கோடிப்
பட்டாம்பூச்சிகள்
ஞானம் இழந்து
நாணம் கொண்டு
நானாக மாறிவிட்டேன்!!!
உன்னில் கரைந்து.....